பொது செய்தி

தமிழ்நாடு

வாடிக்கையாளர்களுக்கு புதிய தேவை 'சியட்' டயர் நிறுவனம் அறிமுகம்

Added : ஜூலை 25, 2020
Share
Advertisement

சென்னை, கொரோனா காலத்தில், தொடர்புகள் அற்ற சேவையை வழங்கும் முயற்சிகளை, 'சியட்' டயர் நிறுவனம் மேற்கொண்டுள்ளது.இதுகுறித்து, அந்த நிறுவனம் வெளியிட்ட செய்திக்குறிப்பு:சென்னையில், வாடிக்கையாளர்களின் பாதுகாப்பு மற்றும் வினியோகஸ்தர்களின் தொடர் வணிகம் ஆகியவற்றை கருத்தில் கொண்டு, புதிய நடவடிக்கைகள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.இவற்றில், தொடர்பில்லாத, 'பிக் அப்' மற்றும், 'ட்ராப்' சேவை; முன்பதிவு அடிப்படையிலான சேவை மற்றும் கடைகளில் மேற்கொள்ளப்படும் உள் நடவடிக்கைகளும் அடங்கும்.வாகனங்கள் பராமரிக்கப்பட்டு, கிருமி நாசினியால் சுத்தம் செய்து, சாலையில் இயக்க தயாராக இருப்பதை உறுதி செய்து, இருப்பிடத்திற்கே வந்து வாகனங்கள் ஒப்படைக்கப்படுகின்றன. இது முக்கிய நகரங்களில் செயல்பாட்டிற்கு வந்துள்ளது.இந்த முயற்சிகள், வாடிக்கையாளர்களின் டயர் தொடர்பான அனைத்து பிரச்னைகளையும், பாதுகாப்பாகவும், திறமையாகவும் கவனத்தில் கொள்வது மட்டுமல்லாமல், சியட் கடைக்காரர்களுக்கு, தொடர் வணிகத்தையும் உறுதி செய்கின்றன.இந்த சேவை, நாடு முழுதும் துவங்கப்பட உள்ளது. இந்த சேவை, ஏழு நாட்களில், 22 நகரங்களில் வழங்கப்பட உள்ளது. வாடிக்கையார்கள், 86575 89639 என்ற எண்ணில், 'மிஸ்டு கால்' கொடுத்து, அருகில் உள்ள சியட் கடையில் முன்பதிவு செய்து கொள்ளலாம்.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X