சம்பவம் செய்தி

தமிழ்நாடு

மாவா குடோன் சிக்கியது

Added : ஜூலை 25, 2020
Share
Advertisement

எண்ணுார், மாவா தயாரிக்கும் மூல பொருட்களை பறிமுதல் செய்த போலீசார், மூவரை கைது செய்தனர்.எண்ணுார் தனிப்படை போலீசார், நேற்று முன்தினம் இரவு, எண்ணுார் விரைவு சாலையில் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, சரக்கு வாகனத்தை சோதனையிட்டனர்.ஒரு வாகனத்தில், மாவா தயாரிக்கும் மூலப்பொருட்களான, ஜர்தா, ஹான்ஸ் உள்ளிட்ட புகையிலைப் பொருட்கள், 10 மூட்டைகள் இருந்தன. அவற்றை பறிமுதல் செய்த போலீசார், கொடுங்கையூரைச் சேர்ந்த ஓட்டுனர் ஜோதி வேல், 28, என்பவரை விசாரித்தனர்.இதில், மாதவரத்தில் குடோன் செயல்படுவது தெரியவந்தது. தொடர்ந்து, தனிப்படை போலீசார், மாதவரம் குடோனில் சோதனை செய்தனர்.அங்கு, 21 மூட்டைகளில், ஜர்தா, ஹான்ஸ் புகையிலைப் பொருட்கள் இருந்தன.அவற்றையும் பறிமுதல் செய்த போலீசார், குடோன் பொறுப்பாளர் ராணா சோட்ராம், 23, பிர்லா போஸ், 28, ஆகியோரை கைது செய்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X