பொது செய்தி

தமிழ்நாடு

வீடியோ கான்பிரன்ஸில் பொதுமக்கள் புகார் குறித்து கமிஷனர் விசாரணை

Added : ஜூலை 25, 2020
Share
Advertisement

மதுரை, மதுரை போலீஸ் கமிஷனர் அலுவலகத்திற்கு புகார் கொடுக்க வருவோரால் கொரோனா தொற்று ஏற்படுவதை தடுக்க வாட்ஸ் ஆப் அல்லது வீடியோ கான்பிரன்ஸ் மூலம் விசாரிக்க வேண்டும் என்று தினமலர் நாளிதழ் செய்தி வெளியிட்டது. இதன்எதிரொலியாக நேற்று முதல் வீடியோ கான்பிரன்ஸ் மூலம் பொதுமக்கள் புகார்கள் குறித்து கமிஷனர் பிரேம் ஆனந்த் சின்ஹா, துணைகமிஷனர் சிவபிரசாத் விசாரிக்கின்றனர்.நகரில் கொரோனா பாதிப்பிற்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசாரும் தப்பவில்லை. இதுவரை 150க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கமிஷனர் அலுவலக போலீசாரும் பாதிக்கப்பட்டனர். இங்கு புகார் கொடுக்க வருவோரால் தொற்று ஏற்படும் அபாயம் இருப்பதாக தினமலர் நாளிதழ் செய்தி வெளியிட்டது. சென்னையை போல் வாட்ஸ் ஆப் அல்லது வீடியோ கான்பிரன்ஸ் மூலம் மனுக்களை விசாரிக்க வேண்டும் எனவும் தினமலர் சுட்டிக்காட்டியது.இதன் எதிரொலியாக நேற்று முதல் வீடியோ கான்பிரன்ஸ் மூலம் கமிஷனரும், துணைகமிஷனரும் பொதுமக்களிடம் புகார் குறித்து விசாரித்து வருகின்றனர். கமிஷனர் அலுவலகத்திற்கு புகார் கொடுக்க வருவோர் கேன்டீன் அருகில் உள்ள போலீஸ் பூத்தில் உள்ள கேமரா மூலம் கமிஷனரிடம் புகார் தெரிவிக்கலாம். நேற்று 4 பேர் இவ்வகையில் புகார் மனு கொடுத்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X