தமிழ்நாடு

* தனியாருடன் கூட்டணி அமைத்த ஆவின் பொறுப்பாளர்கள் 3 பேர் 'சஸ்பெண்ட்' கண்டுகொள்ளாத மேலாளர் மீதும் பாய்ந்தது நடவடிக்கை

Added : ஜூலை 25, 2020 | கருத்துகள் (2)
Share
Advertisement
மதுரை மதுரையில் தனியார் விற்பனையாளர்களிடம் கூட்டு சேர்ந்து பால் கொள்முதல் செய்த ஆவின் மொத்த பால் குளிர்விப்பான் (பி.எம்.சி.,) பொறுப்பாளர்கள் 3 பேர் 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டனர்.பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கங்களின் உறுப்பினர்களை தவிர்த்து தனியாரிடம் கமிஷன் அடிப்படையில் ஆயிரக்கணக்கான லிட்டர் கொள்முதல் செய்வதாக புகார் எழுந்தது. பின்னணியில் அதிகாரிகள்,
  * தனியாருடன் கூட்டணி அமைத்த ஆவின் பொறுப்பாளர்கள் 3 பேர் 'சஸ்பெண்ட்'    கண்டுகொள்ளாத மேலாளர் மீதும் பாய்ந்தது நடவடிக்கை

மதுரை மதுரையில் தனியார் விற்பனையாளர்களிடம் கூட்டு சேர்ந்து பால் கொள்முதல் செய்த ஆவின் மொத்த பால் குளிர்விப்பான் (பி.எம்.சி.,) பொறுப்பாளர்கள் 3 பேர் 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டனர்.பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கங்களின் உறுப்பினர்களை தவிர்த்து தனியாரிடம் கமிஷன் அடிப்படையில் ஆயிரக்கணக்கான லிட்டர் கொள்முதல் செய்வதாக புகார் எழுந்தது. பின்னணியில் அதிகாரிகள், பி.எம்.சி., பொறுப்பாளர்களுக்கு 'கூட்டு' உள்ளது என குற்றம்சாட்டு எழுந்தது.பால்வளத்துறை முதன்மை செயலர் கோபால், கமிஷனர் வள்ளலாருக்கு புகார்கள் சென்றன. கமிஷனர் உத்தரவுபடி சென்னை துணை பதிவாளர் அலெக்ஸ் (பால்வளம்) மதுரையில் பி.எம்.சி., செயல்பாடுகள் குறித்து ஆய்வு செய்து முறைகேடு நடந்ததை கண்டுபிடித்தார். இதையடுத்து பொறுப்பாளர்கள் மேலத்திருமாணிக்கம் ராமநாதன், டி.கிருஷ்ணாபுரம் ரவி, எஸ்.எம். அம்மாபட்டி மகாலிங்கம் 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டனர். திருமங்கலம் பி.எம்.சி.,களில் அதிகபட்சம் ரூ. 1.50 -- 2 லட்சம் மதிப்புள்ள பிற மாவட்ட பால் கொள்முதல் செய்யப்பட்டது தெரிந்தது. இதை கண்காணிக்க தவறிய அப்பகுதி ஆவின் மேலாளர் பாலு 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டார்.---சுட்டிக்காட்டிய தினமலர்சுறுசுறுப்பான கமிஷனர்--இப்பிரச்னை குறித்து ஜூலை 12ல் தினமலர் நாளிதழ் செய்தி வெளியிட்டது. அதில் கமிஷனர் வள்ளலார் சிறப்பு குழு அமைத்து விசாரிக்க வலியுறுத்தப்பட்டது. இதன் எதிரொலியாக விசாரணை நடத்தி நடவடிக்கை எடுத்த கமிஷனரை பால் உற்பத்தியாளர்கள் பாராட்டினர்.

Advertisement


வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Somiah M - chennai,இந்தியா
25-ஜூலை-202020:41:48 IST Report Abuse
Somiah M ஆணையர் வள்ளலார் அவர்கள் எப்போதும் போல இப்பொழுதும் விதிகளின் படியான துரித மற்றும் கண்டிப்பான நடவடிக்கைக்கு பெயர் பெற்றவர் ஆயிற்றே .
Rate this:
Cancel
Lt Col M Sundaram (Retd) - Thoothukudi 628 008 ,இந்தியா
25-ஜூலை-202020:04:21 IST Report Abuse
Lt Col M Sundaram (Retd) Why no action is taken on the chairman appointed by the ruling party?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X