சம்பவம் செய்தி

தமிழ்நாடு

போலீஸ் செய்திகள்

Added : ஜூலை 25, 2020
Share
Advertisement

போலி விற்பனை வரி அதிகாரிகள் சிக்கினர்

மதுரை: கருப்பாயூரணி பகுதியில் உள்ள தொழில் நிறுவனத்திற்கு நேற்று மூவர் சென்றனர். தங்களை விற்பனை வரி அதிகாரிகள் என அறிமுகப்படுத்திக்கொண்டு ஆய்வு செய்ய வேண்டும் என்றனர். சந்தேகப்பட்ட நிர்வாகத்தினர், அடையாள அட்டையை கேட்டபோது தரமறுத்தனர். போலீசிற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. விசாரணையில் அவர்கள் ஓய்வுபெற்ற விற்பனை வரி அலுவலர்கள் விராட்டிபத்து முத்து 60, ஆனையூர் அசோகன் 62, மற்றும் செல்லுார் சந்தானம் எனத்தெரிந்தது. பணம் பறிக்கும் நோக்கில் வந்த அவர்களிடம் விசாரணை நடக்கிறது.இறப்புக்கு சென்றவர் இறப்புமதுரை: ஒத்தக்கடை விக்னேஷ் 28. பாலீஷ் பட்டறை தொழிலாளி. இவரது சக தொழிலாளி நேற்று காலை மாரடைப்பால் இறந்தார். துக்கம் விசாரிக்க சென்ற இடத்தில் நண்பர்களுக்குள் தகராறு ஏற்பட, வீட்டிற்கு ஓடிவந்தபோது மயங்கி விழுந்தார். அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் இறந்தார். போலீசார் விசாரிக்கின்றனர்.வெட்டியவருக்கும் விழுந்தது வெட்டுமதுரை: மாநகராட்சி முன்னாள் கிழக்கு மண்டல தலைவர்கள் குருசாமி(தி.மு.க.,), ராஜபாண்டி (அ.தி.மு.க.,) தரப்பிற்கும் முன்விரோதம் உள்ளது. இருதரப்பிலும் தொடர்ந்து கொலை நடக்கிறது. நேற்று பகல் பாலரெங்காபுரத்தில் ராஜபாண்டி தரப்பைச் சேர்ந்த 'குல்லா' முத்துப்பாண்டியை குருசாமி சகோதரி மகன் அழகுராஜா தரப்பினர் வெட்டினர். அப்போது தவறுதலாக அழகுராஜாவுக்கும் வெட்டு விழுந்தது. கீரைத்துரை போலீசார் விசாரிக்கின்றனர்.கஸ்டம்ஸ் அதிகாரியிடம் மோசடிமதுரை: எஸ். ஆலங்குளம் பாலச்சந்திரன் 58. மதுரை விமான நிலைய கஸ்டம்ஸ் அதிகாரி. இவரிடம் அறிமுகமான நெல்லை லட்சுமி 31, என்பவர் ரூ.3 லட்சம் பெற்று ரூ.30 ஆயிரம் மட்டும் தந்து மோசடி செய்ததாக கூடல்புதுார் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.அச்சக உரிமையாளர்களுக்கு எச்சரிக்கைமதுரை: நகரில் முன்விரோதத்தால் கொலை யானவர்களின் நினைவு தினத்தில், வன்முறையை துாண்டும் வகையில் போஸ்டர்கள் ஒட்டப்படுகின்றன. சில நாட்களுக்கு முன் அனுப்பானடியில் நினைவு தின போஸ்டர் ஒட்டிய ரவுடி முத்துக்குமார் கொலை செய்யப்பட்டார். அதேபோல் கரும்பாலையில் எதிரிகளை எச்சரிக்கும் வகையில் போஸ்டர்கள் ஒட்டியதாக பூப்பாண்டி 19, வண்டியூர் சந்தனராஜா 28, ஆகியோர் மீது அண்ணாநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.நகரில் இதுபோன்ற போஸ்டர்களை அச்சடித்து தரக்கூடாது. முகவரியின்றி அச்சடித்து கொடுக்கும் அச்சக உரிமையாளர் மீது வழக்குப்பதிவு செய்வதோடு, அச்சகத்திற்கு 'சீல்' வைக்கப்படும் என கமிஷனர் பிரேம் ஆனந்த் சின்ஹா எச்சரித்துள்ளார்.முதியவரிடம் நகை திருட்டுமதுரை: தத்தனேரி கொன்னவாயன் சாலை முருகேசன் 63. அப்பகுதி இ.எஸ்.ஐ., மருத்துவமனை அருகில் வந்தபோது, ஒருவர் ஏற்கனவே அறிமுகமானவர் போல் பேச்சு கொடுத்து மோதிரம் மாடல் பார்க்க வேண்டும் என்றுக்கூறி, ஒன்றரை பவுன் மோதிரத்தை திருடிக்கொண்டு தப்பினார். செல்லுார் போலீசார் விசாரிக்கின்றனர்.சிறுமிகளுக்கு பாலியல் தொந்தரவுமதுரை: ஒத்தக்கடை ஒய். புதுப்பட்டி சூர்யா 18. இவர் அப்பகுதி நாலரை வயது, 5 வயது சிறுமிகளுக்கு சாக்லேட் கொடுத்து பாலியல் தொந்தரவு செய்ததாக 'போக்சோ' சட்டத்தில் ஒத்தக்கடை போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.2 பேர் சாவுதிருப்பரங்குன்றம்: நிலையூர் ராமானுஜம் நகர் மோகன் 34. இரு நாட்களுக்குமுன் வீட்டிலிருந்து சென்றவர் திரும்பவில்லை. நேற்று அப்பகுதி கிணற்றில் உடல் கண்டெடுக்கப்பட்டது. தற்கொலை செய்து கொண்டாரா என விசாரணை நடக்கிறது.தனக்கன்குளம் அரவிந்த் நகர் மீனாட்சி சுந்தரம் 40. உடல்நலமின்றி சிகிச்சை பெற்று வந்தார். ஜூலை 3ல் வீட்டிலிருந்த சானிடைசரை குடித்தார். மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்தவர் நேற்று இறந்தார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X