தமிழ்நாடு

பேக்கேஜிங் டெண்டர் முறைக்கு ஊராட்சி தலைவர்கள் எதிர்ப்பு

Added : ஜூலை 25, 2020
Share
Advertisement

மதுரை, :மதுரையில் பேக்கேஜிங் டெண்டர் முறைக்கு எதிராக ஊராட்சி தலைவர்கள் போராட்டம் வலுக்கிறது.கிராம ஊராட்சிகளில் நுாறு நாள் வேலை உறுதிதிட்டம் உள்ளிட்ட பணிகளுக்கு தற்போது பேக்கேஜிங் முறையில் ஒன்றியங்கள், ஊரக வளர்ச்சி முகமையில் டெண்டர் விடப்படுகிறது. இது தங்களது அதிகாரத்தை பறிப்பதாக இருப்பதாக ஊராட்சி தலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். கலெக்டர் அலுவலகத்தில் ஒன்றிய வாரியாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுகின்றனர்.நேற்று கள்ளிக்குடி, கொட்டாம்பட்டி ஒன்றியங்களை சேர்ந்த 67 கிராம ஊராட்சி தலைவர்கள் பேக்கேஜிங் டெண்டர் முறையை ரத்து செய்யக்கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். நிதிக்குழு மானியங்களில் மாநில அரசு தலையிட கூடாது. நுாறு நாள் வேலை பணியாளர்களுக்கு அரசு அடையாள அட்டை வழங்க வேண்டும். ஊரக வேலைவாய்ப்பு திட்டங்களில் ஊராட்சிகளுக்கு அதிகாரம் வழங்க வேண்டும் எனவும் வலியுறுத்தினர்.உசிலம்பட்டிஒன்றிய அலுவலகம் முன் ஊராட்சி தலைவர்கள் கூட்டமைப்பு சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. தலைவர் அஜீத் பாண்டி, செயலாளர் சின்னசாமி, பொருளாளர் விமலா உட்பட 18 ஊராட்சி தலைவர்கள் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X