பொது செய்தி

தமிழ்நாடு

தொடக்க கூட்டுறவு வங்கிபணியாளர்கள் வேலைநிறுத்தம்

Added : ஜூலை 25, 2020
Share
Advertisement

மதுரை, கடன் வழங்கும் நடைமுறையில் மாற்றம் செய்யக்கூடாது உள்ளிட்ட 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி மதுரையில் தொடக்க கூட்டுறவு வங்கி அனைத்து பணியாளர்கள் சங்கம் (டாக்பியா) தொடர் வேலை நிறுத்தப் போராட்டத்தை துவக்கியது.மதுரை கிழக்கு, மேற்கு, திருப்பரங்குன்றம் ஒன்றிய தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்க பணியாளர் மற்றும் நகர கூட்டுறவு கடன் சங்க பணியாளர்கள் 300க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். 'டாக்பியா' மாவட்ட செயலாளர் ஆசிரிய தேவன் தலைமை வகித்தார். நிர்வாகிகள் ரத்தினகுமார், கருப்பணன், கதிர்வேல்பாண்டியன் முன்னிலை வகித்தனர்.கூட்டுறவு கடன் சங்கங்களில் வழங்கப்படும் அனைத்து கடன்களும் ஏற்கனவே நடைமுறையில் உள்ளது போல் வழங்க வேணடும். நுகர்பொருள் வாணிபக் கழக பணியாளர்களுக்கு இணையாக ரேஷன் பணியாளர்களுக்கும் சம்பளம் வழங்க வேண்டும். கொரோனா பேரிடரில் பணியாற்றும் ரேஷன் ஊழியருக்கு ரூ.50 லட்சம் காப்பீடு செய்ய வேண்டும் போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தினர்.மேலுார்ஆர்ப்பாட்டத்திற்கு சங்கத் தலைவர் பழனிகுமார் தலைமை வகித்தார். செயலாளர் ஜீவானந்தம் முன்னிலை வகித்தார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X