சம்பவம் செய்தி

தமிழ்நாடு

குடிமராமத்து பணி முறைகேடு புகார்

Added : ஜூலை 25, 2020
Share
Advertisement

மதுரை, மதுரை வடக்கு தாலுகா குலமங்கலம் ஊராட்சி வடுகபட்டி கண்மாயில் குடிமராமத்து பணியில் முறைகேடு நடப்பதாக கிராமத்தினர் குற்றம் சாட்டினர்.இதுகுறித்து கேசவராஜா தலைமையில் கிராமத்தினர் கலெக்டர் வினய்யிடம் அளித்த மனு: கண்மாய் மூலம் நுாற்றுக்கணக்கான நன்செய், புன்செய் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. குடிமராமத்து திட்டத்தில் கண்மாய் சீரமைப்பு, வரத்து கால்வாய் துார்வாருதல் மேற்கொள்ள பணிகள் நடக்கின்றன. இதற்காக ஏராளமான மண்ணை தோண்டி ரோடு அமைக்க பயன்படுத்துகின்றனர். இதுகுறித்து விசாரிக்க வேண்டும், என்றனர்.பொதுப்பணித்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில்,''பாசனதாரர்கள் மூலம் பணி நடக்கிறது. முறைகேடு நடக்கவில்லை,'' என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X