பொது செய்தி

தமிழ்நாடு

மீனவர்கள் ஆர்ப்பாட்டம்

Added : ஜூலை 25, 2020
Share
Advertisement

ராமேஸ்வரம்:விசைப்படகிற்கு விதித்த அபராதத்தை ரத்து கோரி ராமேஸ்வரத்தில் மீனவர்கள் ஆர்ப்பாட்டம் செய்தனர்.

பாரம்பரிய எல்லையில் மீன்பிடித்த விசைப்படகிற்கு மீன்துறை அபராதம் விதித்ததை ரத்து செய்யவும், டீசல் விலை உயர்வால் வாழ்வாதாரம் பாதிப்பதால், உற்பத்தி விலைக்கு டீசல் வழங்கிட கோரி ஜூலை 20 முதல் ராமேஸ்வரம் மீனவர்கள் வேலை நிறுத்தம் செய்தனர். இக்கோரிக்கையை வலியுறுத்திராமேஸ்வரம் பஸ் ஸ்டாண்டில் மீனவர் சங்க நிர்வாகிகள் தேவதாஸ், சேசு, சகாயம், எமிரேட், பலர் ஆர்ப்பாட்டம் செய்தனர்.

பாம்பன் : கடலில் 12 கடல் மைல் துாரத்தில் தனியாருக்கு நீண்டகால குத்தகைக்கு தாரை வார்த்து, மீனவர்கள் வாழ்வாதாரத்திற்கு பாதிப்பு ஏற்படுத்தும் மத்திய அரசின் தேசிய மீன்வள கொள்கை கண்டித்து நேற்று பாம்பனில் மீனவர் சங்க நிர்வாகிகள் எஸ்.பி.ராயப்பன், சின்னதம்பி, அருள், பலர் கடற்கரையில் கருப்பு கொடி ஏந்தி ஆர்ப்பாட்டம் செய்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X