காரைக்குடிக்கு தொழில் நிறுவனம் இல்லை தொழில் வணிக கழகம் அதிருப்தி| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

காரைக்குடிக்கு தொழில் நிறுவனம் இல்லை தொழில் வணிக கழகம் அதிருப்தி

Added : ஜூலை 25, 2020
Share

காரைக்குடி:முதல்வரின் புரிந்துணர்வு ஒப்பந்தப்படி காரைக்குடி, தேவகோட்டை பகுதிக்கு எந்தவித தொழில் நிறுவனங்களை அறிவிக்காதது வருத்தம் அளிப்பதாக, காரைக்குடி தொழில் வணிக கழக தலைவர் சாமி திராவிடமணி தெரிவித்தார்.

அவர் கூறியதாவது,அரசு அறிக்கைபடி 6555 பேருக்கு வேலை தரும் 16 தொழில் நிறுவனங்களை துவக்க புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது. இதை தொழில்வணிக கழகம் சார்பில் வரவேற்கிறோம். அதே நேரம் திருநெல்வேலி, திண்டுக்கல் தவிர அனைத்து தொழில்களும் வடமாவட்டங்களில் தான் அமைய உள்ளன.

பின்தங்கிய சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டத்திற்கு ஒரு தொழில் நிறுவனம் கூட அறிவிக்காதது வருத்தம் அளிக்கிறது. முதல்வர் புதிதாக துவங்க உள்ள தொழில் நிறுவனங்களை இப்பகுதியில் துவக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X