உலர் உணவு வழங்கல் | Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

உலர் உணவு வழங்கல்

Added : ஜூலை 25, 2020
Share

சிவகங்கை:சிவகங்கை அருகே 48 காலனி நகராட்சி பள்ளியில் மாணவர்களுக்கு சத்துணவுக்கான அரிசி, பருப்பு வழங்கப்பட்டது. இப்பள்ளியில் படிக்கும் 1 முதல் 8 ம் வகுப்பு வரையிலான மாணவர்கள் உலர் உணவுகளை பெற்றனர். மாணவர்களுக்கு பள்ளி தலைமை ஆசிரியை மரியசெல்வி தலைமையில் ஆசிரியர்கள் வழங்கினர். இதில், பெற்றோருடன் வந்த மாணவர்கள் சமூக இடைவெளியுடன், முக கவசம் அணிந்து வந்தனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X