சம்பவம் செய்தி

தமிழ்நாடு

செய்திகள் சில வரிகளில்...திண்டுககல்

Added : ஜூலை 25, 2020
Share
Advertisement

நாற்று பண்ணைகள் ஆய்வு
பழநி: மாவட்ட அளவில் திண்டுக்கல், ஒட்டன்சத்திரம் மற்றும் பழநிபகுதிகளில் செயல்படும் விதை விற்பனை நிலையங்கள், காய்கறி நாற்று பண்ணைகளில் ஆய்வு நடந்தது. விதை விற்பனைக்கு தரச்சான்று, பதிவுச்சான்று, உரிமம் சரிபார்க்கப்பட்டது. விதைகளில் காலாவதி தேதி, ஈரப்பதம், முளைக்கும் திறன் சரிபார்த்தனர். துணை இயக்குனர் மாயக்கிருஷ்ணன் தலைமையில் விதை ஆய்வாளர்கள் ராஜூ, கிருஷ்ணகுமார் உடனிருந்தனர்.

மனு வழங்க அவகாசம்

திண்டுக்கல்: கொரோனா ஊரடங்கால் வருவாய்த்துறையின் ஜமாபந்தியில் 'ஆன்லைன்' மூலம் மனுக்களை பதிவு செய்ய வசதி செய்துள்ளனர். ஜூன் 29 முதல் ஜூலை 15 வரை பொதுமக்களிடம் இருந்து ஜமாபந்தி மனுக்கள் ஆன்லைனில் பெறப்பட்டன. சர்வர் பிரச்னை, ஆன்லைன் பதிவில் சிரமங்கள் இருந்ததால் அரசு, ஜூலை 31 வரை அவகாசம் நீட்டித்துள்ளது. வி.ஏ.ஓ.,க்கள் தாசில்தார்கள் நடவடிக்கை எடுக்க அரசு உத்தரவிடப்பட்டுள்ளது.



கிணற்றில் விழுந்த பசு

வேடசந்துார்: அம்மாபட்டியை சேர்ந்த விவசாயி பொன்னன் 45. இவரது பசுமாடு மேய்ந்து கொண்டிருந்தபோது தோட்டத்துக் கிணற்றில் விழுந்தது. தீயணைப்பு நிலைய அலுவலர் ஜோதிராமலிங்கம் தலைமையில் மாட்டை மீட்டனர். ஆனால் 60 அடி ஆழ கிணறு என்பதால், இறந்த நிலையிலேயே மீட்கப்பட்டது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X