பொது செய்தி

தமிழ்நாடு

'ஆவி'க்கு நடுங்கும் கொரோனா

Added : ஜூலை 25, 2020
Share
Advertisement

தமிழகத்தில் இதுவரை 1.90 லட்சம் பேர் பாதித்துள்ளனர். கொரோனா தாக்குதலில் இருந்து தப்பிக்க மருத்துவத்துறையினர் பல்வேறு 'டிப்ஸ்'களை வாரி வழங்கி வருகின்றனர். குறிப்பாக நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க சத்தான உணவுகளை உண்பது மட்டுமின்றி, சூரியஒளி குளியல், ஆவி (வேது) பிடிக்கும் முறையை பின்பற்ற அறிவுறுத்தி வருகின்றனர்.

பாட்டி வைத்தியம்கொரோனா வைரஸ் முதலில் தொண்டையை தான் தாக்கும். பிறகு அங்கிருந்து கிளம்பி நுரையீரலை பதம் பார்க்கும். அந்த வைரஸை தொண்டையிலேயே அழிக்க, ஆவி பிடிக்கும் முறை நல்ல பலன்கொடுப்பதாக கூறப்படுகிறது. கொரோனாவின் பிறப்பிடமான சீனாவில் இம்முறையை கையாண்டு தொற்றை கட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர்.

ஆயுர்வேதத்தில் இதை 'ஸ்வேதனம்' என்கின்றனர். நம் முன்னோர்கள் கையாண்ட பாட்டி வைத்திய முறை ஆவி பிடிப்பது. இதற்கு ஒரு பைசா கூட செலவு செய்ய தேவையில்லை. செய்ய வேண்டியதெல்லாம், கொதிக்கும் தண்ணீர் உள்ள பாத்திரத்தின் முன்பு தலை குனிந்து உட்கார்ந்து, போர்வையால் மூடிக்கொண்டு ஆவியை சுவாசித்தால் போதும். கட்டாயம் கண்களை மூடிக்கொள்ள வேண்டும்.

ஆவி பிடிப்பதால் கொரோனாவில் இருந்து தப்பிப்பதோடு, அதன் மூலம் கிடைக்கும் நன்மைகளோ பலப்பல..ஆவி பிடித்து நோய்களை விரட்டும் பழக்கம் கிராம மக்களிடையே இன்னும் வழக்கத்தில் இருக்கிறது.

இதுகுறித்து திண்டுக்கல் ஆயுர்வேத மருத்துவர் ஆர்.சங்கீதா கூறியதாவது:


ஆரோக்கியத்திற்கு நல்லது

சுத்தமான நீரில் வேப்பிலை, துளசி, நொச்சி இலை போட்டு நன்றாக கொதிக்க வைத்து ஆவி பிடிப்பது உடல் ஆரோக்கியத்திற்கு நல்லது. தொல்லைப்படுத்தும் சளி, இருமலை விரட்ட, ஆவி பிடித்தால் சுவாசம் தடையின்றி இருக்கும். ஆஸ்துமா, சைனஸ் நோயால் துன்பப்படுவோர் இம்முறையை பின்பற்றலாம். நீரில் எலுமிச்சை அல்லது மஞ்சள் பொடியை கலந்து ஆவி பிடித்தால் தலை பாரம் நீங்கும்.

காய்ச்சல் இருந்தால் நொச்சி இலையை வேக வைத்து அதனை ஆவி பிடிப்பதால் வியர்வை உண்டாகி காய்ச்சலின் தீவிரம் குறையும்.யாரெல்லாம் ஆவி பிடிக்கலாம்தலைபாரம், தலைவலி, மூக்கடைப்பு, நெஞ்சுவலி, தொண்டை கரகரப்பு, தொண்டை கட்டு உள்ளவர்கள், ஆஸ்துமா, கண்களின் கீழுள்ள சைனஸ் வெற்றிடத்தில் நீருள்ளவர்கள், கழுத்து மற்றும் தலையிலுள்ள கபதோஷ வியாதி உள்ளவர்கள் பிடிக்கலாம். மூக்கில் இருந்து நீர் வருதல், வாயில் அதிகம் எச்சில் ஊறுதல், ஆவிக்கு பதில், மூலிகை புகையை பிடிக்கலாம்.


ஆவி பிடிக்க கூடாதவர்கள்



அதிகம் சாப்பிட்டவர்கள், மயக்கம், தலைச்சுற்று உள்ளவர்கள், மது அருந்தியவர்கள், கண் நோய் உள்ளவர்கள், கண்ணில் அழுத்தம் இருப்பவர்கள், வயிற்றுப்போக்கு, மலபந்தம், பசி, தாகத்தோடு இருப்பவர்கள், கோபமுள்ளவர்கள், மாதவிடாய் பெண்கள், மஞ்சள் காமாலை உள்ளவர்கள். இவர்கள் ஆவி மட்டுமின்றி மூலிகை புகைப்பிடிப்பதையும் தவிர்க்க வேண்டும்.


தினமும் பிடிக்கலாமா



ஆவி பிடிக்க தகுதியானவர்கள் தினமும் பிரச்னை தீரும் வரை ஆவி பிடிக்கலாம். கண்களை ஈரத்துணியால் கட்டிக் கொண்டு ஆவி பிடிக்க வேண்டும். ஆவியின் சூடு கண்களுக்கு உகந்ததல்லை.


செய்முறை என்ன



வெறும் தண்ணீரை கொதிக்க வைத்தும் ஆவி பிடிக்கலாம். சுக்கு, நொச்சி இலை, புதினா, கொத்தமல்லி விதை இவைகளில் ஏதாவது 3 அல்லது 4 மூலிகைளை ஒரு கைப்பிடி அளவு எடுத்து ஒரு லிட்டர் தண்ணீரில் போட்டு கொதிக்க வைத்து பிடிக்கலாம். விரலி மஞ்சள், பட்டை, சுக்கு, ஏலக்காய், சித்தரத்தை, கிராம்பை நன்கு இடித்து அடுப்பில் சுட்டு அல்லது கரிக்கணலில் போட்டு புகையை பிடிக்கலாம். கர்ப்பிணிகள் மருத்துவ ஆலோசனைக்கு பிறகே ஆவி பிடிக்க வேண்டும்.


நேரம் காலம் எது



காலையில் பல் துலக்கியபின் வெறும் வயிற்றிலும், இரவு சாப்பிட்டு 2 மணி நேரத்திற்கு பின்பும், துாங்குவதற்கு முன்பாக ஆவி பிடிக்கலாம்.


நிவாரணம் நிச்சயம்



ஆயுர்வேதத்தில் வியர்வை உண்டு பண்ணக் கூடிய முறை 4 வகைப்படும். அதில் ஆவி பிடிக்கும் முறை 'பாஷ்ப ஸ்வேதன' முறைகளில் ஒன்று. ஆவி பிடிப்பது மூக்கிலுள்ள சைனஸ் துவாரங்களை விரிவடைய செய்து, மண்டையிலுள்ள சளி, நீரை வெளியேற்றுகிறது. மூக்கடைப்பு ஜலதோஷம், சளித்தொல்லை, தலைபாரம், தலைவலி, ஒவ்வாமை போன்றவற்றில் இருந்தும் நிவாரணம் கிடைக்கும்.

கொரோனா காலத்திலும் இம்முறை உகந்தது. ஆவி பிடிப்பதால் உடலில் உள்ள நாடிகள் சுத்திகரிக்கப்படுகின்றன. வெந்நீர் பருகுதல், மூச்சு, உடற்பயிற்சி சுவாச பாதையை சுத்திகரித்து காற்றோட்டம், ரத்த ஓட்டம் சீராகும். மூச்சு பயிற்சியின் போது வாயை மூடி மூக்கினால் மூச்சு விட வேண்டும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X