கழிவுநீர் கலப்பதால் மாசுபடும் வராகநதி

Added : ஜூலை 25, 2020
Share
Advertisement
 கழிவுநீர் கலப்பதால் மாசுபடும் வராகநதி

தேவதானப்பட்டி:வராகநதியில் பாதாள சாக்கடை கழிவுநீர் கலந்து நீர்மாசுபட்டுள்ளது.

வராகநதி வடுகபட்டி, மேல்மங்கலம், ஜெயமங்கலம் உள்ளிட்ட கரையோர கிராம மக்களுக்கு குடிநீர் ஆதாரமாக உள்ளது. 20க்கும் மேற்பட்ட கண்மாய்கள் நிரப்பப்பட்டு விவசாயம் நடக்கிறது.பெரியகுளம் நகராட்சி பாதாள சாக்கடை திட்ட கழிவுநீரை மழைக்காலங்களில் வராக நதியில் வெள்ளம் வரும்போது திறந்து விடுகின்றனர்

இதனால் நீர் மாசுபடுகிறது. இந்த நீர் உறைகிணற்றுக்குள் செல்வதால் கலங்கலான சுகாதாரமற்ற குடிநீர் மக்களுக்கு சப்ளையாகி நோய் அபாயம் உள்ளது. இதை தடுக்க பொதுப்பணித்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X