தமிழ்நாடு

அனுமதியின்றி வராதே! வெளிமாநில தொழிலாளர்களுக்கு கோவை கலெக்டர் கடும் எச்சரிக்கை

Updated : ஜூலை 25, 2020 | Added : ஜூலை 25, 2020 | கருத்துகள் (2)
Share
Advertisement
 அனுமதியின்றி வராதே! வெளிமாநில தொழிலாளர்களுக்கு கோவை கலெக்டர் கடும் எச்சரிக்கை

கோவை:ஊரடங்கு அமலில் இருக்கும் சூழலில், ஒரு சில ஏஜன்டுகள் வடமாநிலத்தொழிலாளர்களை அனுமதியின்றியும், உரிய உடல் பரிசோதனையின்றியும் பணிக்கு அழைத்து வருவதாக, புகார் எழுந்துள்ளது. இவர்கள் மீது, கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என, கலெக்டர் எச்சரித்துள்ளார்.
வெளி மாநில தொழிலாளர்கள் இன்றி, பல்வேறு நிறுவனங்கள் தொழிலை, முழுமையாக செய்ய முடியாத சூழலுக்கு தள்ளப்பட்டுள்ளன.மீண்டும் அவர்கள் மாவட்டத்துக்குள், நுழைய கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.அதிக தளர்வுகள் வழங்கப்பட்டு இருப்பினும், மாவட்டம் விட்டு மாவட்டம், மாநிலம் விட்டு மாநிலம் செல்ல, கட்டுப்பாடு தொடர்கிறது.
பிரசவம், இறப்பு, திருமணம், அவசர மருத்துவ சிகிச்சை ஆகிய நான்கு காரணங்களுக்கு மட்டுமே, எல்லை தாண்ட, 'இ-பாஸ்' வழங்கப்பட்டு வருகிறது.இந்நிலையில், கோவை தொப்பம்பட்டி பிரிவில் சில தனியார் நிறுவனத்தினர், வட மாநில தொழிலாளர்களை, இ-பாஸ் இன்றி அழைத்து வந்துள்ளதாக, மாவட்ட நிர்வாக அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது.அதன் பேரில், வருவாய், மாநகராட்சி துறையினர் ஆய்வு மேற்கொண்டு, தொழிலாளர்கள் அனைவரையும் எச்சரித்து தனிமைப்படுத்தியுள்ளனர்.
இது குறித்து, கலெக்டர் ராஜாமணியிடம் கேட்டபோது அவர் கூறியதாவது:புகாரின் பேரில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு, நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அழைத்து வரப்பட்ட அனைத்து தொழிலாளர்களுக்கும், கொரோனா பரிசோதனை எடுக்கப்பட்டு, 14 நாட்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.தொழில் நிறுவனங்கள், தொழிலாளர்களை பிற மாவட்டம், மாநிலங்களில் இருந்து அழைத்து வர விரும்பினால், மாவட்ட நிர்வாகத்திற்கு, தகவல் அளிக்க வேண்டியது கட்டாயம்.
அவ்வாறு வருபவர்கள், மாவட்ட எல்லையில் கொரோனா பரிசோதனைக்குப் பின் அனுமதிக்கப்படுவர்.அனுமதியின்றி அழைத்து வரும் பட்சத்தில் தொழிலாளர்கள், சம்பந்தப்பட்ட நிறுவனம், அமைப்பு, உரிமையாளர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுப்பதுடன், நிறுவனம் செயல்படவும் தடை விதிக்கப்படும்.இவ்வாறு, அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
25-ஜூலை-202008:17:46 IST Report Abuse
ஆப்பு நீங்களும் ஜாக்கிரதையா இருக்கணும் ஐயா...
Rate this:
Cancel
25-ஜூலை-202006:19:06 IST Report Abuse
சுந்தரேசன் அப்ப எல்லா தமிழர்களும் நல்ல வேலையில் இருக்காங்க போல. இல்லன்னா தமிழ்நாட்டில் யாருக்கும் இந்த வேலை செய்ய தெரியாதா? நடந்தே போவோம் இல்லன்னா நடக்கிறதே வேறன்னு போராட்டம் பண்ணவங்கள தேடி போய் கூப்பிடனுமா?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X