பொது செய்தி

தமிழ்நாடு

வீட்டுக்குள் பாதுகாப்பாக இருந்தால் கொரோனாவிடமிருந்து தப்பலாம்

Added : ஜூலை 25, 2020
Share
Advertisement

''புற்றுநோய் இருப்பவர்களுக்கு, நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருப்பதால், கொரோனா தொற்று ஏற்படுவதற்கு அதிக வாய்ப்பு உள்ளது. இந்நோயாளிகள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்,'' என்று புற்றுநோய் அறுவை சிகிச்சை டாக்டர் பாலமுருகன் கூறினார்.மார்பக புற்றுநோய், எந்த வயதினரை அதிகமாக தாக்குகிறது. அந்நோய் வராமல் தடுக்க, என்ன செய்ய வேண்டும்

இந்நோய், நடுத்தர வயதினரை தாக்கவே, அதிக வாய்ப்பு. குடும்பத்தில் யாருக்கேனும் இந்நோய் இருக்கும் பட்சத்தில், அவர்களின் வாரிசுகள், 20 வயதை அடையும் போது, மருத்துவரை அணுகி, மரபணு பரிசோதனை செய்து கொள்வது நல்லது. அதற்கேற்ப தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளலாம்.புற்றுநோய் உள்ளவர்களை, கொரோனா எளிதாக தொற்றும் என கூறப்படுகிறதே...?

புற்றுநோய் இருப்பவர்களுக்கு, நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருப்பதால், அவர்களை கொரோனா எளிதில் தொற்ற, வாய்ப்பு உள்ளது. இவர்கள், துாய்மையாக இருப்பது, சரியான உணவு பழக்க வழக்கத்தை பின்பற்றுவதன் வாயிலாகவும், விதிமுறைகளை பின்பற்றி வீட்டில் இருப்பதன் வாயிலாகவும், தொற்றில் இருந்து பாதுகாத்துக்கொள்ளலாம்.தற்போதைய சூழலில், புற்றுநோயாளிகள் அறுவை சிகிச்சை செய்து கொள்ளலாமா?

கொரோனா தொற்று இல்லை என்று உறுதி செய்து கொண்ட பின், முறையான பரிசோதனைகளை செய்து, அதற்குப்பின்பே அறுவை சிகிச்சை செய்து கொள்வது குறித்து, முடிவு செய்ய முடியும்.அனைத்து விதமான புற்றுநோய்களுக்கும், ஒரே விதமான அறிகுறி இருக்குமா அல்லது வெவ்வேறு விதமாக இருக்குமா?

இந்நோய், முடி மற்றும் நகங்களை தவிர, அனைத்து உறுப்புகளையும் தாக்கும். எந்த உடல் உறுப்பை நோய் தாக்கியிருக்கிறதோ, அதற்கு ஏற்ப அறிகுறிகள் தென்படும். ஆனால், உடலின் மொத்த எடையில், பத்து சதவீதம் ஒரே மாதத்தில் குறையும். அப்போது, உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும்.புற்றுநோய்க்கு அறுவை சிகிச்சை தான் தீர்வா, மாற்று சிகிச்சை முறைகள் ஏதேனும் உள்ளதா?

புற்றுநோய் சிகிச்சை என்பது, அறுவை சிகிச்சை, கதிர்வீச்சு, மருந்து உட்கொள்ளுதல் அடங்கிய கூட்டு சிகிச்சை. இதில், அறுவை சிகிச்சை மிக முக்கியமானது.புற்றுநோய் தாக்காமல், தப்புவது எப்படி?

வாழ்க்கை முறை மாற்றம், சத்தான உணவு, ரசாயனம் கலந்த பொருட்கள் மற்றும் உணவு உட்கொள்வதை தவிர்ப்பதன் வாயிலாக, புற்றுநோய் தாக்காமல் தப்பித்துக்கொள்ளலாம்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X