தமிழ்நாடு

சிக்கல்:கொரோனா பாதித்தவர்களைஅழைத்து வருவதில்; ஆ்புலன்ஸ், டிரைவர் பற்றாக்குறை

Added : ஜூலை 25, 2020
Share
Advertisement
 சிக்கல்:கொரோனா பாதித்தவர்களைஅழைத்து வருவதில்; ஆ்புலன்ஸ், டிரைவர் பற்றாக்குறை

திண்டுக்கல்: மாவட்டத்தில் கொரோனா பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது.கிராம்பறங்களில் இருந்து சிகிச்சைக்காக காத்திருப்பவர்களை அழைத்து வருவதற்கு போதுமான ஆம்புலன்ஸ்கள்,டிரைவர்கள் பற்றாகக்குறை உள்ளது. இதனை சரிசெய்ய வேண்டுமென மக்கள் கோரிக்கைவிடுத்து வருகின்றனர்.
மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு 2 ஆயிரத்தை கடந்துள்ளது. அதில் 30 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். நகர் பகுதி மட்டுமின்றி கிராமப்பகுதியிலும் தொற்று அதிகளவில் பரவி வருகிறது.மாவட்டம் முழுவதும் 29 ஆம்புலன்ஸ்கள் இயங்குகின்றன.

அதில் மாவட்டத்திற்குள் 5, சென்னைக்கு 2 என 7 ஆம்புலன்ஸ்கள் கொரோனா நோயாளிகளை அழைத்து வர இயங்கி வருகின்றன.மீதியுள்ள 22 ல் இருசக்கர வாகன ஆம்புலன்ஸ் ஒன்றும் அடங்கும். அதிக பாதிப்புள்ள பகுதிகளுக்கு முன்னுரிமை கொடுத்து இந்த ஆம்புலன்ஸ்கள் சென்று அழைத்து வருகின்றன.கிராமங்களில் ஒருவர் அல்லது இருவர் பாதிக்கப்பட்டு இருந்தால் அவர்களை அழைத்து செல்ல கால தாமதம் ஏற்படுகிறது.

டிரைவர் பற்றாக்குறையால் சில சமயங்களில் குறைவான ஆம்புலன்ஸ்கள் இயக்கப் படுகின்றன. இதனால் இதர நோய்களுக்கு வயதானோர், கர்ப்பிணிகளை மருத்துவமனைக்கு அழைத்து வருவதில் சிக்கல் நீடிக்கிறது. தொற்று பாதித்தவர்கள், நோயாளிகளை மருத்துவனைக்கு உடனே அழைத்து செல்ல, வட்டாரத்திற்கு ஒரு வாகனம் என கூடுதலாக ஆம்புலன்ஸ் இயக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X