பொது செய்தி

தமிழ்நாடு

செய்தி சிலவரிகளில்....தேனி

Added : ஜூலை 25, 2020
Share
Advertisement

அபராதம் விதிப்பு

உத்தமபாளையம்: கொரோனா பரவலை தடுக்க முக கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டு உள்ளது. உத்தமபாளையம் ஒன்றியம் அணைப்பட்டி, ராயப்பன்பட்டி, ஆனைமலையன்பட்டி மற்றும் கோகிலாபுரம் ஊராட்சிகளில் ஆர்.ஐ., வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ஞானதிருப்பதி, கண்ணன் குழுவினர் முககவசமின்றி சென்றோரிடம் தலா ரூ. 50 அபராதம் வசூலித்தனர்.

வீணாகுது குடிநீர்

தேவதானப்பட்டி: பொம்மிநாயக்கன்பட்டி ஊராட்சி சிந்துவம்பட்டி மக்களுக்கு வராகநதி உறைகிணற்றில் கிடைக்கும் நீர், 57 கிராம திட்டத்தில் குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது. இங்கு பால்வாடி அருகில் மேல்நிலைத்தொட்டி துாண்கள் சேதமடைந்துள்ளது. அத்தொட்டி நிரம்பி தினமும் பல ஆயிரம் லிட்டர் நீர் வீணாகி கழிவுநீர் கால்வாயில் கலக்கிறது. இதை தடுக்க பெரியகுளம் ஒன்றிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தற்கொலை

கம்பம்: உலகத்தேவர் சந்தையை சேர்ந்தவர் ஜெயப்பாண்டி 46. இவர் வீட்டில் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். காரணம் குறித்து வடக்கு போலீசார் விசாரித்தனர்.

வாய்க்கால் துார்வாரப்படுமா

கம்பம்: சண்முகாநதி அணை ராயப்பன்பட்டி மலையடிவாரத்தில் உள்ளது. இதனால் சின்னஓவுலாபுரம், ஆனைமலையன்பட்டி, ராயப்பன்பட்டி, கிராமங்களில் 1600 ஏக்கர் புன்செய் நிலங்கள் பாசன வசதி பெறுகிறது.மொத்த உயரம்52.5 அடி. அணை நீர்மட்டம் 26 அடியிலேயேஉள்ளது.

பருவமழை பெய்ய துவங்கியுள்ள நிலையில் தற்போது தண்ணீர் செல்லும் வாய்க்காலை துார்வார விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

முகக்கவசம் வழங்கல்

தேவாரம்: டி.ரெங்கநாதபுரத்தில் ஊராட்சி பெண் தலைவர் உட்பட 15 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். மூன்று வார்டுகள் உள்ள கிராமத்தின் அனைத்து நுழைவு பகுதிகளும் 'சீல்' வைக்கப்பட்டு வெளிநபர்கள் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளது. ஊராட்சி துணைத் தலைவர் திருமலைராஜ் சார்பில் கிராமத்தினருக்கு இலவச முக கவசம் வழங்கப்பட்டது. சுகாதாரத்துறை பரிந்துரைப்படி மூன்று நாட்களுக்கு கபசுர குடிநீர் வழங்கப்படுகிறது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X