ஒன்றிய அலுவலகம் முற்றுகை

Added : ஜூலை 25, 2020
Share
Advertisement

கம்பம்:கம்பம் ஒன்றியம் குள்ளப்பகவுண்டன்பட்டி ஊராட்சியில் 2016 ல் ரூ. ஆயிரம் டிபாசிட் செலுத்தி குடிநீர் இணைப்பு பெற்றுள்ளனர்.

அனுமதியற்ற குடிநீர் இணைப்புகளை முறைப்படுத்த ரூ. 3 ஆயிரம் டிபாசிட் மற்றும் ஓராண்டிற்குரிய கட்டணம் ரூ. 720 என ரூ. 3720 வசூலிக்க அரசு உத்தரவிட்டது. அங்கு அதிகாரிகள் அனுமதியின்ற இணைப்பு வைத்துள்ளவர்களிடம் கட்டணம் வசூல் செய்ய ஆரம்பித்தனர்.இதற்கு எதிர்ப்பு தெரிவித்து 50 க்கும் மேற்பட்டோர் தாங்கள் ஏற்கெனவே டிபாசிட் செலுத்தி இணைப்பு பெற்றதாகக்கூறி கம்பம்ஒன்றிய அலுவலகத்தில் முற்றுகை போராட்டம் நடத்தினர்.

வட்டார வளர்ச்சி அலுவலர் நாகராஜ், 60 மாதங்களாக குடிநீர் கட்டணம் செலுத்தவில்லை. தற்போது ரூ. ஆயிரம் கட்டுங்கள். மீதியை கொரோனா முடிவிற்கு வந்தபின் கட்டுங்கள்,' என்றார். சமாதான பேச்சுவார்த்தையின்போது ஊராட்சி தலைவர் பொன்னுத்தாய் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X