தமிழ்நாடு

கை நழுவுகிறது? இ-பாஸ் விதிமுறைகளை அரசு தளர்த்த பின்னலாடை துறையினர் எதிர்பார்ப்பு

Updated : ஜூலை 25, 2020 | Added : ஜூலை 25, 2020 | கருத்துகள் (3)
Share
Advertisement
 கை நழுவுகிறது? இ-பாஸ் விதிமுறைகளை அரசு தளர்த்த  பின்னலாடை துறையினர் எதிர்பார்ப்பு

திருப்பூர்:கோடை கால சீசனை போல், குளிர் கால ஆடை வர்த்தகமும் பாதிப்படைந்துள்ளதால், திருப்பூர் பின்னலாடை துறையினர் கவலை அடைந்துள்ளனர்.
உள்நாட்டு சந்தைக்கான ஆயத்த ஆடை உற்பத்தி செய்யும் நிறுவனங்கள், திருப்பூரில் அதிகளவில் உள்ளன. இந்நிறுவனங்களுக்கு, கோடை, குளிர், பண்டிகை காலங்கள் மிக முக்கியமானதாக உள்ளன. ஆண், பெண், சிறுவர் என அனைத்து தரப்பினருக்கான உள்ளாடை, டி-சர்ட், காலர் சர்ட், இரவு நேர ஆடை உட்பட எல்லாவகை ஆயத்த ஆடைகளும் உற்பத்தி செய்யப்பட்டு, நாடுமுழுவதும் உள்ள வர்த்தகர்களுக்கு அனுப்பிவைக்கப்படுகிறது.கோடையும் 'அவுட்'கொரோனா ஊரடங்கு எதிரொலியாக, திருப்பூர் நிறுவனங்கள், கோடை கால ஆடை வர்த்தகத்தை முழுமையாக இழந்தன.
கோடைக்காக உற்பத்தி செய்த ஆடைகளை சந்தைப்படுத்த முடியாமலும், தயாரித்து அனுப்பிய ஆடைக்கான தொகையை வர்த்தகர்களிடமிருந்து பெறமுடியாமல் தொழில்முனைவோர் தவிக்கின்றனர்.நாடு முழுவதும், கொரோனா பரவல் அதிகரித்து வருவதால், டில்லி, மும்பை, கோல்கத்தா உட்பட மிகப்பெரிய ஆடை வர்த்தக நகரங்களெல்லாம் முடங்கியுள்ளன. வீட்டைவிட்டு வெளியே வந்து, ஆடை வாங்க மக்கள் தயங்குகின்றனர்.
வழக்கமாக, மழைக்காலங்களில், குளிர் தாங்கும்வகையிலான, லுாப்நெட், இன்டர்லாக் வகை துணியில் தயாரிக்கப்பட்ட, ஸ்வெட்டர், தொப்பி இணைக்கப்பட்ட ஆடைகள் அதிகளவில் விற்பனை செய்யப்படும். உள்ளாடை ரகங்கள், எல்லா சீசனிலும், ஒரே சீராக விற்பனை நடைபெறும்.இ-பாஸ் பிரச்னைகொரோனா கட்டுக்குள் வராததால், ஆடை விற்பனை பாதிக்கப்பட்டுள்ளது. இதனால், திருப்பூர் ஆயத்த ஆடை உற்பத்தி நிறுவனங்களுக்கு, கோடையைப்போன்று, குளிர் கால ஆடை வர்த்தகமும், கொரோனாவுக்கு இரையாகும் நிலையே நீடிக்கிறது.
தமிழகத்தில், மாவட்டம் விட்டு மாவட்டம் செல்வதற்கு, இ-பாஸ் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. குளிர்காலத்துக்காக உற்பத்தி செய்யும் ஆடைகளையும்கூட, வெளிமாநிலங்களுக்கு அனுப்பி வைப்பதில் நிறுவனங்களுக்கு சிக்கல் ஏற்படுகிறது. ஆயத்த ஆடை சரக்குகளை கொண்டு செல்ல ஏதுவாக, இ-பாஸ் விதிமுறைகளை அரசு தளர்த்த வேண்டும் என, பின்னலாடை துறையினர் எதிர்பார்க்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
25-ஜூலை-202012:43:44 IST Report Abuse
Sathyanarayanan Sathyasekaren EPass, only for agents , not for general public
Rate this:
Cancel
VENKATASUBRAMANIAN - bangalore,இந்தியா
25-ஜூலை-202009:23:11 IST Report Abuse
VENKATASUBRAMANIAN Epass சிஸ்டம் தேவையில்லாதது. மற்ற மாநிலங்களில் ரெஜிஸ்டர் செய்து விட்டால் போதும். ஆன்லைன் tracking செய்கிறார்கள். இதனால் ஏஜென்சிஸ் கொள்ளை அடிக்கிறார்கள். நேரடியாக apply செய்பவர்களுக்கு கிடைப்பதில்லை. Mafia வே இயங்குகிறது.
Rate this:
Cancel
25-ஜூலை-202008:16:50 IST Report Abuse
ஆப்பு கவலை வேண்டாம். எல்லோருக்கும் வயிறார சோறு போடப்படும்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X