சம்பவம் செய்தி

தமிழ்நாடு

போலீஸ் பயிற்சிக்கு அழைக்க மனு

Added : ஜூலை 25, 2020
Share
Advertisement

தேனி:2019 ல் நடந்த போலீஸ் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களை மீண்டும் தேர்வு செய்து பயிற்சிக்கு அழைக்க வலியுறுத்தி தேனி கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.

கடமலைக்குண்டு மல்லையசாமி, கம்பம் ஜலாலுதீன், ரங்கராஜ்பாண்டியன், தினேஷ்குமார் மனுவில்,'' 2019ல் நடந்த போலீஸ் எழுத்து,உடல், உடற்திறன் தேர்வுகளில் 20 ஆயிரம் பேர் தேர்ச்சி பெற்றனர். அப்போதைய தேவைக்கேற்ப 8858 பேர் அதிக கட்-ஆப் வைத்து தேர்வு செய்து பயிற்சிக்கு அனுப்பினர். அடுத்து 10,576 போலீசார் தேர்வு செய்ய உள்ளதாக அரசு அறிவித்துள்ளது.

போலீஸ் பற்றாக்குறை சூழலில் ஏற்கனவே அனைத்து தேர்வுகளிலும் தேர்ச்சி பெற்று தகுதியாக உள்ள எங்களைப்போன்ற 10 ஆயிரம் பேரை மீண்டும் தேர்வு செய்தால் அரசுக்கு நிதிச்சுமை குறையும். 1988, 1993,1996, 2006 ஆண்டுகளில் இதுபோல் தேர்வானர்களை நியமித்துள்ளனர். எனவே 2019ல் தேர்வானவர்களை பயிற்சிக்கு அழைக்க வேண்டும்,'என குறிப்பிடப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X