தமிழ்நாடு

விறுவிறுப்பு:அகல ரயில்பாதை அமைக்கும் பணி

Added : ஜூலை 25, 2020
Share
Advertisement

தேனி:அகல ரயில்பாதை அமைக்கும் பணிக்காக மதுரை - போடி தடத்தில் இயக்கப்பட்ட மீட்டர்கேஜ் ரயில்சேவை 2010 டிசம்பரில் நிறுத்தப்பட்டது. அதன்பின் 10 ஆண்டுகளாக தேனி மாவட்டத்தில் ரயில் சேவை இல்லாததால் போடி - மதுரை, கம்பம் - மதுரை வழித்தடத்தில் ரோடு வாகன போக்குவரத்தில் நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

மதுரை -- போடி அகல ரயில்பாதை திட்டத்தில் மத்திய அரசு ஒதுக்கிய நிதியில் மதுரை முதல் உசிலம்பட்டி வரை பணிகள் முடிந்து ஜனவரி 24-ல் புதிய பாதையில் ரயில் வெள்ளோட்டம் விடப்பட்டது. தற்போது கணவாய் மலைப்பகுதி முதல் ஆண்டிபட்டி வரை பணிகள் முழு வீச்சில் நடந்து வருகிறது. இங்கு தண்டவாளங்கள் அமைக்கும் பணி முடிந்துள்ளது. ஆண்டிபட்டி ரயில்வே ஸ்டேஷன், தண்டவாளம், பிளாட்பார்ம் அமைக்கும் சுறுசுறுப்பாக மேற்கொள்ளப்பட்டுள்ளது.

ஆண்டிபட்டியில் இருந்து தேனி வரை தண்டவாளம் அமைக்கும் பணியில் பெரும்பகுதி நிறைவடைந்துள்ளது. ஏற்கனவே தண்டவாளம் அமைக்கப்பட்டுள்ள இடங்களில் இயந்திரங்கள் மூலம் துல்லிய சீரமைப்பு பணிகளும் தொடர்கிறது. இதற்கான நிதி பகுதி வாரியாக ஒதுக்கப்பட்டுள்ளது. தேனியில் இருந்து போடி வரை எஞ்சிய பணிகளும் தாமதமின்றி விரைந்து முடிக்கப்பட்டால் அடுத்தாண்டு தேனி மாவட்டத்திற்கு மீண்டும் ரயில் சேவை துவங்குவதற்கான வாய்ப்புள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X