தேனியில் ரூ.3 கோடியில் முருங்கை மகத்துவ மையம்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

தேனியில் ரூ.3 கோடியில் முருங்கை மகத்துவ மையம்

Added : ஜூலை 25, 2020
Share
தேனி:தேனியில் முருங்கை மகத்துவ மையம் துவக்கப்படும் என அரசு அறிவித்தது.தற்போது இதற்கு ரூ.3 கோடி ஒதுக்கியுள்ளது. தேக்கம்பட்டி சிறைக்கு பின்புறம் 12.5 ஏக்கர் நிலத்தை தோட்டக்கலைத் துறை அதிகாரிகள் தேர்வு செய்தனர்.இங்கு பல்லாண்டு முருங்கை, செடி முருங்கை சாகுபடியாகிறது. இதில் சாகுபடி, ஆராய்ச்சி மேற்கொள்ளப்படும்.விவசாயிகளுக்கு செடி முருங்கை விதை, முருங்கை

தேனி:தேனியில் முருங்கை மகத்துவ மையம் துவக்கப்படும் என அரசு அறிவித்தது.தற்போது இதற்கு ரூ.3 கோடி ஒதுக்கியுள்ளது. தேக்கம்பட்டி சிறைக்கு பின்புறம் 12.5 ஏக்கர் நிலத்தை தோட்டக்கலைத் துறை அதிகாரிகள் தேர்வு செய்தனர்.

இங்கு பல்லாண்டு முருங்கை, செடி முருங்கை சாகுபடியாகிறது. இதில் சாகுபடி, ஆராய்ச்சி மேற்கொள்ளப்படும்.விவசாயிகளுக்கு செடி முருங்கை விதை, முருங்கை மரக்கன்றுகளையும் வழங்க உள்ளனர். செடி முருங்கை இலைகளை பதப்படுத்தி பவுடர் தயாரித்து ஏற்றுமதி செய்யவும், மாதிரி ஆய்வு மையமும் துவங்கப்பட உள்ளது என தோட்டக்கலைத்துறை துணை இயக்குனர் பாண்டி தெரிவித்தார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X