சட்டசபையை கூட்ட விரும்புகிறார் கெலாட்: பா.ஜ.,அதனை தடுக்கிறது: காங்., | Surjewala accuses BJP of conspiring to topple govt, says Gehlot wants to silence those doubting Cong majority | Dinamalar

பொது செய்தி

இந்தியா

சட்டசபையை கூட்ட விரும்புகிறார் கெலாட்: பா.ஜ.,அதனை தடுக்கிறது: காங்.,

Updated : ஜூலை 25, 2020 | Added : ஜூலை 25, 2020 | கருத்துகள் (25)
Share
புதுடில்லி: சட்டசபையை கூட்டி பெரும்பான்மையை நிரூபிக்க முதல்வர் அசோக் கெலாட் விரும்புகிறார். ஆனால் பா.ஜ. தடுக்க நினைக்கிறது என காங். மூத்த தலைவர் ரன்தீப் சுர்ஜவாலா கூறினார்.ராஜஸ்தான் காங். முதல்வர் அசோக் கெலாட் நேற்று இரவு கவர்னர் கல்ராஜ்ஸ்மிஸ்ராவை சந்தித்து தனக்கு பெரும்பான்மை எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு உள்ளதால் சட்டசபையை கூட்ட உத்தரவிட வேண்டும் என கடிதம் கொடுத்து
congress, bjp, rajasthan politics, rajasthan, gehlot, randeep surjewala

புதுடில்லி: சட்டசபையை கூட்டி பெரும்பான்மையை நிரூபிக்க முதல்வர் அசோக் கெலாட் விரும்புகிறார். ஆனால் பா.ஜ. தடுக்க நினைக்கிறது என காங். மூத்த தலைவர் ரன்தீப் சுர்ஜவாலா கூறினார்.

ராஜஸ்தான் காங். முதல்வர் அசோக் கெலாட் நேற்று இரவு கவர்னர் கல்ராஜ்ஸ்மிஸ்ராவை சந்தித்து தனக்கு பெரும்பான்மை எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு உள்ளதால் சட்டசபையை கூட்ட உத்தரவிட வேண்டும் என கடிதம் கொடுத்து வலியுறுத்தினார். இதன் மீது கவர்னர் முடிவு எடுக்கவில்லை. இதையடுத்து இன்று கவர்னர் மாளிகை முன் கொலாட் ஆதரவு எம்.எல்.ஏ.க்களுடன் தர்ணாவில் இறங்கினார்.


latest tamil newsஇது குறித்து காங். பொதுச்செயலாளர் ரன்தீப் சுர்ஜவாலா கூறியது, சட்டசபையை கூட்டி பெரும்பான்மை நிரூபிக்க முதல்வர் விரும்புகிறார். அதனை மதித்து அரசியலமைப்பு சட்டப்பிரிவு 174-ன் படி கவர்னர் சட்டசபையை கூட்ட உத்தரவிட வேண்டும்.

காங்கிரசிற்கு பெரும்பான்மை இல்லை எனக் கூறுபவர்களுக்கு சட்டசபையை கூட்டி பதிலடி தர வேண்டும் என அசோக் கெலாட் எண்ணுகிறார். கவர்னர் இதற்கு அனுமதி தர மறுக்கிறார்.'' பா.ஜ. அதனை தடுக்க முயற்சிக்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X