பொது செய்தி

தமிழ்நாடு

ஓடையில் புது வெள்ளம்; பொதுமக்கள் மகிழ்ச்சி

Added : ஜூலை 25, 2020
Share
Advertisement
 ஓடையில் புது வெள்ளம்; பொதுமக்கள் மகிழ்ச்சி

பல்லடம்:நீண்ட நாட்களுக்கு பின், கழிவுநீர் ஓடை, மழை நீர் ஓடையாக மாறியது, பல்லடத்தில் பொதுமக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.பல்லடம் நகராட்சி அலுவலகம் வழியாக செல்லும் ஓடை, பல ஆண்டுகளாக, சாக்கடை கழிவுநீர் மட்டுமே பெருக்கெடுத்து ஓடி வந்தது.முட்செடி முளைத்து, புதர்கள் மண்டி கிடந்த நகராட்சி ஓடை, 2 கோடி ரூபாய் மதிப்பில் துார்வாரும் பணி நடந்து வருகிறது. பருவமழைக்கு முன் துார்வாரும் பணிகளை முடிக்க திட்டமிடப்பட்டது. ஓடையின் கரைகள் பலப்படுத்தப்பட்டு வரும் நிலையில், நேற்று முன்தினம் பல்லடம் வட்டாரத்தில் அரை மணி நேரம் மழை பெய்தது.இதனால், கழிவுநீர் ஓடை நீண்ட நாட்களுக்கு பின், மழைநீர் செல்லும் நீரோடையாக மாறியது.பருவமழைக்கு முன், நகராட்சி நிர்வாகம் தூர்வாரும் பணிகளை மேற்கொண்டது, பல்வேறு தரப்பினர் மத்தியிலும் வரவேற்பை பெற்றுள்ளது. சிறு மழைக்கே ஓடையில் நீர் வரத்து ஏற்பட்டது, பல்லடம் மக்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.ஆக்கிரமிப்புகளை அகற்றி, ஓடை வழித்தடத்தின் இதர பகுதிகளையும், முழுமையாக துார்வாரினால், கிடைக்கும் மழை நீர் மூலம், பல்வேறு கிராமங்கள் பயனடையும் என்பதில் ஐயமில்லை.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X