பொது செய்தி

தமிழ்நாடு

வரி செலுத்த அவகாசம்

Added : ஜூலை 25, 2020
Share
Advertisement

கொரோனா ஊரடங்கால், மோட்டார் வாகன வரி செலுத்த ஜூன், 30ம் தேதி வரை கால அவகாசம் தமிழக அரசால் வழங்கப்பட்டது. ஏப்., முதல் ஜூலை வரையிலான வரியை முழுமையாக ரத்து செய்ய வேண்டுமென லாரி உரிமையாளர் சங்கம், ஆம்னி பஸ், சரக்கு வாகன உரிமையாளர் சங்கம் வலியுறுத்தி வந்தன. இச்சூழலில், 'ஜூலை, 31 வரை மோட்டார் வாகன வரி செலுத்த கால அவசாசம் வழங்கப்பட்டுள்ளது,' என, தெரிவித்துள்ளார்.மீன் கடைக்கு மக்கள் எதிர்ப்புபல்லடம், மங்கலம் ரோட்டில், அரசு கல்லுாரி அருகே, மீன் கடை அமைப்பதற்கான, கட்டுமான பணிகள் நடந்து வந்தன. அப்பகுதியினர் அளித்த புகாரால், நகராட்சி அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர். அதில், மீன் கடை அமைப்பதால், சுகாதார சீர்கேடு, நோய் தொற்று ஏற்படும் என்பதால், கட்டுமான பணிகளை தடுத்து நிறுத்தினர். தொழிலாளர்கள், முக கவசம் அணியாமல் இருந்ததால், 2 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டது.கையெழுத்து இயக்கம் துவக்கம்மின்சார திருத்த சட்டத்தை திரும்ப பெற வலியுறுத்தி, இலவச மின்சார உரிமை பாதுகாப்பு கூட்டியக்கம் சார்பில், கையெழுத்து இயக்கம் நடத்தப்படுகிறது. அவிநாசி ஒன்றியத்தில், தமிழ்நாடு விவசாயிகள் சங்க, அவிநாசி ஒன்றிய செயலாளர் வெங்கடாசலம் துவக்கி வைத்தார். சி.ஐ.டி.யு., (விசைத்தறி) மாநில தலைவர் முத்துசாமி, இ.கம்யூ., ஒன்றிய செயலாளர் இசாக், ம.தி.மு.க., தெற்கு ஒன்றிய செயலாளர் சுப்ரமணி உட்பட பலர் பங்கேற்றனர்.விழிப்புணர்வு கையேடு வெளியீடுகொரோனாவில் இருந்து விடுபடுவது எப்படி, போலீசார் தங்களை பாதுகாத்து கொள்வதற்கான நடைமுறை, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்துவது, உடல் உறுதி, உணவு பழக்க மேம்பாடு குறித்து விவரிக்கப்பட்டுள்ளது. சூரிய குளியல், அதிக தண்ணீர் அருந்துவது, நோய் எதிர்ப்பு சக்தி தரும் மூலிகைகள், கொரோனாவை வீட்டிலேயே தடுக்க குறிப்பு, உணவு பட்டியல், மற்றும் உதவி எண்கள் என, கையேடு வழங்கப்பட்டுள்ளது.மண் திட்டால் விபத்து சூழல்வெள்ளகோவிலில் இருந்து மூலனுார் செல்லும் ரோட்டில், 18 கி.மீ., துாரத்துக்கு இருபுறமும், மண் கொட்டப்பட்டு வருகிறது. ஆனால், இது ரோட்டின் மட்டத்தை விட ஒரு அடி உயரமாக இருப்பதால், வாகன ஓட்டிகள் அவதிப்படுகின்றனர். எதிரில் வரும் வாகனத்துக்கு வழிவிட, ரோட்டை விட்டு கீழே இறக்கினால் விபத்து ஏற்படும் சூழல் உருவாகி உள்ளது. எனவே, ரோட்டின் மட்டத்துக்கு மண் திட்டு சீரமைக்கப்பட வேண்டும்.மரங்கள் வெட்டி சாய்ப்புபல்லடம் -- பெத்தாம்பாளையம் செல்லும் ரோட்டில், மரங்கள் வேருடன் வெட்டி அகற்றப்பட்டுள்ளன. மரங்கள் வெட்டி அகற்றப்பட்டது, பசுமை ஆர்வலர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. மின் கம்பங்கள் அமைக்கும் பணி நடந்ததால், அவர்கள் வெட்டி இருக்கலாம் என அப்பகுதியினர் கூறுகின்றனர். ஆனாலும், மரங்களை வேருடன் வெட்டுவது ஏற்புடையது அல்ல என, பசுமை ஆர்வலர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.ேஷர் ஆட்டோ பறிமுதல்திருப்பூரில் இயங்கும் ேஷர் ஆட்டோக்களில் சமூக இடைவெளி கடைபிடிப்பதில்லை. நெருக்கமாக பயணிகள் அமர்ந்து செல்வதாக புகார் வந்தது. இதனால், தெற்கு வட்டார போக்குவரத்து துறை அதிகாரிகள் குழுவினர் தாராபுரம் ரோடு, உஷா தியேட்டர் ஸ்டாப் அருகில் ஆய்வு நடத்தினர். சமூக இடைவெளி கடைபிடிக்காமல், அதிக பயணிகளை அழைத்து வந்த இரு ேஷர் ஆட்டோக்களை பறிமுதல் செய்து, விசாரிக்கின்றனர்.பா.ஜ., நிர்வாகிகள் தேர்வுபல்லடம் வடக்கு ஒன்றிய பா.ஜ., நிர்வாகிகள் அறிமுக கூட்டம், கணபதிபாளையத்தில் நடந்தது. திருப்பூர் வடக்கு மாவட்ட தலைவர் செந்தில்வேல் தலைமை வகித்தார். மண்டல தலைவராக பூபாலன், ராமசாமி, அப்புக்குட்டி ஆகியோர் துணை தலைவர்களாகவும், குப்புராஜ், குரு மூர்த்தி மண்டல பொது செயலாளர்களாகவும், செயலாளர்களாக சந்திரசேகர், கணேசன், கோமதி ஆகியோரும், தியாகராஜன் பொருளாளராகவும் தேர்வு செய்யப்பட்டனர்.மரம் தீ வைத்து எரிப்புகொடுவாய் - நாச்சிபாளையம் ரோடு அவிநாசி பாளையம் அருகே, 50 ஆண்டு பழமையான வேப்பமரம் ரோட்டோரத்தில் உள்ளது. இந்த மரத்தை சில விஷமிகள் அழிப்பதற்காக களமிறங்கியுள்ளனர். மரத்தின் அடிப்பாகத்தை தீயிட்டுக் கொளுத்தி உள்ளனர். பாதி மரம் வெந்த நிலையில் குற்றுயிரும் குலை உயிருமாக காட்சியளிக்கிறது. வருவாய்த்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X