பொது செய்தி

தமிழ்நாடு

பிளஸ் 2 மதிப்பெண் சான்றிதழ் வினியோகம்

Added : ஜூலை 25, 2020
Share
Advertisement
 பிளஸ் 2 மதிப்பெண்  சான்றிதழ் வினியோகம்

திருப்பூர்:திருப்பூர் மாவட்டத்திற்குட்பட்ட மேல்நிலைப்பள்ளிகளில், பிளஸ் 2 தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் வினியோகம் கடும் கட்டுப்பாடுகளுடன் துவங்கியது.பிளஸ் 2 முடிவுகள் வெளியான நிலையில், மாணவர்களுக்கான தற்காலிக மதிப்பெண் சான்று, மறுகூட்டல் மற்றும் மறுமதிப்பீடு ஆகியவற்றிற்கான பணிகள் நேற்று துவங்கியது. வரும் 30ம் தேதி வரை நடக்கிறது. இதற்காக பல்வேறு கட்டுப்பாட்டு நடைமுறைகளை பின்பற்ற வேண்டுமென, கல்வித்துறை அறிவுறுத்தி இருந்தது.பள்ளி முன், கூட்டம் கூடுவதை, தவிர்க்க ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டிருந்தனர். மதிப்பெண் சான்றிதழ் வழங்குவோர், கையுறை அணிந்திருந்தனர். மாணவர்கள், பெற்றோர் காத்திருக்க, இரண்டு வகுப்பறைகளை ஒதுக்கப்பட்டிருந்தன. மறு கூட்டல், மறு மதிப்பீடு, விடைத்தாள் நகல் போன்றவற்றுக்கு விண்ணப்பிக்க, ஆன்லைன் வசதியோடு, தனி அறை ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர் என அனைவரும் தங்கள் கைகளை கழுவிய பிறகே பள்ளிக்குள் அனுமதிக்கப்பட்டனர். அசல் மதிப்பெண் சான்றிதழ் விரைவில் வினியோகிக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X