பொது செய்தி

தமிழ்நாடு

வெள்ளியங்காடு பள்ளி மாணவர்கள் அசத்தல்

Added : ஜூலை 25, 2020
Share
Advertisement

மேட்டுப்பாளையம்:மத்திய அரசு வழங்கும், தேசிய வருவாய் திறனாய்வு தேர்வில், வெள்ளியங்காடு அரசு மேல்நிலைப் பள்ளியைச் சேர்ந்த, ஆறு மாணவர்கள் தேர்வு பெற்றுள்ளனர். கடந்தாண்டு டிச.,15ம் தேதி நடந்த தேர்வை, வெள்ளியங்காடு அரசு மேல்நிலைப் பள்ளியின், 14 மாணவர்கள் எழுதினர். இதில், பிரதீபா, சுமன், தர்ஷினி, திரிஷா, மோனிகா, திவ்யதர்ஷினி ஆகிய, 6 மாணவர்கள் தேர்ச்சி பெற்றனர்.இவர்களுக்கு ஆண்டுக்கு, 12,000 ரூபாய் வீதம், நான்கு ஆண்டுகளுக்கு கல்வி உதவித்தொகை கிடைக்கும். கடந்த 8 ஆண்டுகளில், 25 மாணவர்கள் இத்தேர்வில் வெற்றி பெற்று கல்வி உதவித்தொகை பெற்று வருகின்றனர். மாணவர்களை தலைமையாசிரியர் பள்ளி, பெற்றோர் ஆசிரியர் சங்கத்தலைவர் ராமதாஸ், முன்னாள் பள்ளி தலைமையாசிரியர் பழனிச்சாமி மற்றும் ஆசிரியர்கள் பாராட்டினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X