பொது போக்குவரத்து துவங்கினால் தற்காலிக பஸ் ஸ்டாண்ட் திறப்பு| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

'பொது போக்குவரத்து துவங்கினால் தற்காலிக பஸ் ஸ்டாண்ட் திறப்பு'

Added : ஜூலை 25, 2020
Share

திருப்பூர்:''பொது போக்குவரத்து துவங்கியதும், கோவில்வழி பஸ் ஸ்டாண்ட் பயன்பாட்டுக்கு வரும்,'' என, அமைச்சர் ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.திருப்பூர் 'ஸ்மார்ட் சிட்டி' திட்ட பணிகள் குறித்து, கால்நடைத்துறை அமைச்சர் நேற்று, கலெக்டர் அலுவலகத்தில் ஆய்வு நடத்தினர். கலெக்டர் விஜய கார்த்திகேயன் தலைமை வகித்தார். மாநகராட்சி கமிஷனர் சிவக்குமார், 950 கோடி ரூபாய் மதிப்பிலான, 'ஸ்மார்ட் சிட்டி' பணிகள் குறித்து பேசினார்.அமைச்சர் பேசியதாவது:ஸ்மார்ட் சிட்டி பணிகள் தீவிரமாக நடக்கிறது. பொது போக்குவரத்து துவங்கியதும், கோவில் வழியில் அமைக்கப்பட்டுள்ள, பஸ் ஸ்டாண்ட் முழு பயன்பாட்டுக்கு வரும். தேவையான, வசதிகள் அனைத்தும் செய்யப்பட்டுள்ளன.தினமும் மார்க்கெட் கடைகளை அப்புறப்படுத்தி, புதிய மார்க்கெட் கட்டுமான பணியும் துவங்கும். மாநகராட்சியில், 'ஸ்மார்ட் சிட்டி', 'அம்ரூட்' திட்டங்களில், குடிநீர், பாதாள சாக்கடை திட்ட பணிகள் நடந்து வருகின்றன.விரைந்து பணிகளை முடித்து, மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படும்.திருப்பூர் மாவட்டத்தில், குடிசை மாற்று வாரியம் சார்பில், 7,000 அடுக்குமாடி வீடுகள் கட்டப்பட்டுள்ளது. வரும் ஆக., முதல் வீடுகள் ஒதுக்கீடு செய்யப்படும். 'ஸ்மார்ட் சிட்டி' பணி நிறைவு பெற்றதும், மழைநீர் பாதிப்பு முழுவதும் குறையும்.இவ்வாறு, அவர் பேசினார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X