மருத்துவமனையில் என்ன நடக்கிறது| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

மருத்துவமனையில் என்ன நடக்கிறது

Added : ஜூலை 25, 2020
Share
அன்னூர்:அன்னூர் அருகே குமாரபாளையத்தில், ஒரே குடும்பத்தை சேர்ந்த, 5 பேருக்கு, தொற்று உறுதியாகி, இரண்டு நாட்களுக்கு முன், கோவை, இ.எஸ்.ஐ., மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.இந்த குடும்பத்தை சேர்ந்த, 27 வயது இளைஞர் கூறுகையில், 'மருத்துவமனையில் ரத்தம், ஈ.சி.ஜி., ஆக்சிஜன் பரிசோதனைகள் செய்தனர். ஆக்சிஜன் குறைவாக இருப்பவர்களுக்கு ஆக்சிஜன் செலுத்தப்பட்டது. இரண்டு மணி நேரத்துக்கு

அன்னூர்:அன்னூர் அருகே குமாரபாளையத்தில், ஒரே குடும்பத்தை சேர்ந்த, 5 பேருக்கு, தொற்று உறுதியாகி, இரண்டு நாட்களுக்கு முன், கோவை, இ.எஸ்.ஐ., மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.இந்த குடும்பத்தை சேர்ந்த, 27 வயது இளைஞர் கூறுகையில், 'மருத்துவமனையில் ரத்தம், ஈ.சி.ஜி., ஆக்சிஜன் பரிசோதனைகள் செய்தனர். ஆக்சிஜன் குறைவாக இருப்பவர்களுக்கு ஆக்சிஜன் செலுத்தப்பட்டது. இரண்டு மணி நேரத்துக்கு ஒருமுறை, கபசுர குடிநீர், பால், கஞ்சி, ஜுஸ் தந்தனர். மருந்துகளும் தருகின்றனர். காலை, மதியம், இரவு, சத்தான, ருசியான, மூன்று வகை உணவு தருகின்றனர். இரண்டு மணி நேரத்துக்கு ஒரு முறை, உடல் பரிசோதனை செய்கின்றனர்' என்றார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X