பொது செய்தி

தமிழ்நாடு

ஒரே இடத்தில் கொரோனா சிகிச்சை: அதிகாரிகள் அவசர ஆலோசனை

Added : ஜூலை 25, 2020
Share
Advertisement

திருப்பூர்:டாக்டர்கள் பாதிப்பு அடைவதை தடுக்க, ஒரே இடத்தில், கொரோனா நோயாளிகள் அனுமதித்து சிகிச்சை அளிக்க ஆலோசிக்கப்பட்டு வருகிறது.திருப்பூர் மாவட்டத்தில், கொரோனா பரவல் அதிகரித்துள்ளது. இதனால், நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் விதமாக, தாலுகா அரசு மருத்துவமனைகளில், கூடுதலாக, 150 படுக்கை வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.திடீரென கொரோனா தொற்று பரவல் அதிகரித்தாலும், உரிய சிகிச்சை வசதி தேவை என்பதால், 2 ஆயிரத்து, 233 படுக்கை வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இதற்கென, திருப்பூரில் ஜெய்வாபாய் பள்ளி; அவிநாசியில், மகாராஜா கல்லுாரி; தாராபுரத்தில் அரசு ஐ.டி.ஐ., என, தாலுகா வாரியாக, தற்காலிக மருத்துவமனை அமைக்கப்பட்டுள்ளது.இருப்பினும், கொரோனா நோயாளிகள் எண்ணிக்கைக்கு ஏற்ப, சுழற்சி முறையில் பணிபுரிய டாக்டர்கள் கிடையாது. சிகிச்சையில் ஈடுபடும் டாக்டர்கள், தனிமை மற்றும் ஓய்வுக்கு உட்படுத்துவதால், செவிலியர்களே, நோயாளிகளை கண்காணித்து வருகின்றனர்.இப்பிரச்னைக்கு தீர்வு காண, மாவட்டத்தில், ஏதேனும் மூன்று இடங்களைத் தேர்ந்தெடுத்து, ஒட்டுமொத்த கொரோனா நோயாளிகளுக்கும் சிகிச்சை அளிக்க அதிகாரிகள் ஆலோசித்து வருகின்றனர்.மருத்துவ பணிகள் துறையினர் கூறியதாவது:தாலுகா அரசு மருத்துவமனைகளில் சுழற்சி முறையில் பணிபுரிய போதியளவில் டாக்டர்கள் கிடையாது. இப்பிரச்னைக்கு தீர்வு காண, மாவட்டத்தில் ஏதேனும் ஒரு இடத்தைத் தேர்ந்தெடுத்து, அங்கு அனைத்து கொரோனா நோயாளிகளுக்கும் சிகிச்சை அளிக்க ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறது. ஆரம்ப சுகாதார நிலையங்களில் பணிபுரியும் டாக்டர்களையும் கொரோனா சிகிச்சையில் ஈடுபடுத்த சுகாதாரத்துறைக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.இவ்வாறு, அவர்கள் கூறினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X