மழை நீர் சூழ்ந்ததால் மக்கள் அவதி: டிக் சிக்கியது; சிட்கோ தப்பியது| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

மழை நீர் சூழ்ந்ததால் மக்கள் அவதி: 'டிக்' சிக்கியது; 'சிட்கோ' தப்பியது

Added : ஜூலை 25, 2020
Share
திருப்பூர்:திருப்பூர் மாவட்டம் முழுவதும் கடந்த சில நாட்களாக நல்ல மழை பெய்துள்ளது. நேற்று முன்தினம் பெய்த மழையால் பெருக்கெடுத்த வெள்ளம் போல் ஓடியது.திருப்பூர், தாராபுரம் ரோடு, பெரிச்சிபாளையம் முதல் வீதி; ராயபுரம், சூசையாபுரம் மேற்கு, காலேஜ் ரோடு, போயம்பாளையம்-மும்மூர்த்தி நகர், கருப்பராயன் நகர் உள்ளிட்ட பகுதிகளில் உரிய மழைநீர் வடிகால் வசதி இல்லாத நிலையில்,
 மழை நீர் சூழ்ந்ததால் மக்கள் அவதி: 'டிக்' சிக்கியது; 'சிட்கோ' தப்பியது

திருப்பூர்:திருப்பூர் மாவட்டம் முழுவதும் கடந்த சில நாட்களாக நல்ல மழை பெய்துள்ளது. நேற்று முன்தினம் பெய்த மழையால் பெருக்கெடுத்த வெள்ளம் போல் ஓடியது.திருப்பூர், தாராபுரம் ரோடு, பெரிச்சிபாளையம் முதல் வீதி; ராயபுரம், சூசையாபுரம் மேற்கு, காலேஜ் ரோடு, போயம்பாளையம்-மும்மூர்த்தி நகர், கருப்பராயன் நகர் உள்ளிட்ட பகுதிகளில் உரிய மழைநீர் வடிகால் வசதி இல்லாத நிலையில், வீடுகளுக்குள் மழை நீர் புகுந்தது. அவிநாசி ரோடு, அனுப்பர்பாளையம் பகுதியில் பெய்த மழையால் மாவட்ட தொழில் மைய வளாகம் சுற்றிலும் மழை நீர் தேங்கி நின்று கொண்டிருக்கிறது. உரிய வடிகால் இல்லாத நிலையில் இதை வெளியேற்ற முடியாத அவலம் உள்ளது. கே.வி.ஆர். நகர் குடிசை மாற்று வாரிய குடியிருப்பு பகுதியில் ஓடை வழியை சிலர் ஆக்கிரமித்துள்ளனர். இதனால், பாதை முழுவதும் மழை நீர் தேங்கி நிற்கிறது. ஆக்கிரமிப்பு அகற்றுவது குறித்து அப்பகுதியினர் நேற்று கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.'சிட்கோ' தப்பியதுதிருப்பூர் ரயில்வே பாலம் அருகே, பேப்ரிகேசன் ரோடு பகுதியில் சிட்கோ தொழிற்பேட்டை அமைந்துள்ளது. நீண்ட காலத்துக்கு முன், அமைக்கப்பட்ட தொழிற்சாலைகள் என்பதால் இவை தற்போது பெரும் தாழ்வான பகுதியாக மாறி விட்டது. நகரில் சிறிய அளவில் மழை பெய்தால் கூட வளாகத்தினுள் மழை நீர் புகுந்து, தொழில் நிறுவனங்கள் மழை நீரில் மூழ்கி பெரும் அவதியும், நஷ்டமும் ஏற்படும்.நீண்ட போராட்டத்துக்கு பின் தற்போது இதன் ஒரு பகுதியில் மழை நீர் வடிகால் அமைக்கப்பட்டு, பயன்பாட்டுக்கு வந்துள்ளது. தற்போது பெய்த மழையால் அங்கு சேர்ந்த மழை நீர் இந்த வடிகால் வழியாக பெருமளவு வெளியேறி விட்டது. இதனால் வளாகத்தினுள் மழை நீர் தேங்கிய நிலையிலும், நிறுவனங்களுக்குள் மழை நீர் செல்லாமல் தடுக்கப்பட்டது.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X