சூடுபிடிக்காத ஈரோடு ஜவுளிச்சந்தை திருப்பூர் உற்பத்தியாளர்கள் கவலை

Added : ஜூலை 25, 2020
Share
Advertisement

திருப்பூர்:ஈரோடு ஜவுளிச்சந்தை சூடுபிடிக்காததால், திருப்பூர் தொழில்துறையினர் கவலையடைந்துள்ளனர்.ஈரோட்டில் ஜவுளிச்சந்தை திங்கள்கிழமை இரவு துவங்கி, செவ்வாய்கிழமை வரை நடைபெறும். தினமும் ஒரு கோடி முதல் 5 கோடி ரூபாய் விற்பனை நடைபெற்று வந்தது.திருப்பூரில் தயாராகும் பனியன், ஜட்டி உள்ளிட்ட உள்ளாடைகள், செகண்ட்ஸ் ரக ஆடைகள் போன்றவையும், இங்கு விற்கப்பட்டு வருகின்றன.ஊரடங்கு துவங்கியது முதல், தற்போது வரை, ஜவுளிச்சந்தை சூடுபிடிக்காததால், திருப்பூர் உற்பத்தியாளர்கள் கவலையடைந்துள்ளனர்.ஜவுளிச்சந்தை வியாபாரிகள் கூறியதாவது:திருப்பூர் ரகங்களுக்கென, ஜவுளிச்சந்தையில் தனி இடம் உண்டு. மாதந்தோறும், கோடிக்கணக்கில், இவை விற்பனை செய்யப்பட்டு வந்தது.ஜவுளிச்சந்தைக்கு தென் மற்றும் வட மாநில வியாபாரிகள் அதிகளவில் குவிவர். ஊரடங்கு துவங்கியது முதல், இவர்களது வருகை முழுமையாக சரிந்து விட்டது. ஊரடங்கு தளர்விலும், ஜவுளிச்சந்தை களையிழந்தே காணப்படுகிறது. இங்கு துணிகளை வாங்கவரும் பொதுமக்களின் எண்ணிக்கையும் சரிந்துள்ளது. இதற்கு, பொதுப்போக்குவரத்து முழுமையாக துவங்காததும் ஒரு காரணம். இனி பண்டிகை காலங்கள் என்பதால், விற்பனை அதிகரிக்கும் என்ற நம்பிக்கை உள்ளது.பள்ளி, கல்லுாரிகள் திறக்கப்பட்டால், விற்பனை அதிகரிக்கும். அப்போது திருப்பூர் ரகங்களின் விற்பனையும் சூடுபிடிக்கும்.இவ்வாறு, வியாபாரிகள் கூறினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X