சம்பவம் செய்தி

தமிழ்நாடு

மாரடைப்பால் டிரைவர் பலி: விபத்து தவிர்ப்பு

Added : ஜூலை 25, 2020
Share
Advertisement

பெ.நா.பாளையம்:நாமக்கல் மாவட்டம், கரடிப்பட்டி அருகே உள்ள செங்கோடம்பாளையத்தை சேர்ந்தவர் சரவணன்,40; லாரி டிரைவர். நேற்று முன்தினம், பெரியநாயக்கன்பாளையம் அருகே மத்தம்பாளையம் மெயின் ரோட்டில் லாரி ஓட்டிக் கொண்டு வந்தார். திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டது. லாரியை ரோட்டின் ஓரமாக நிறுத்தி, கீழே இறங்கி அருகே மருத்துவமனை உள்ளதா என, அங்கிருந்தவர்களிடம் கேட்டுள்ளார். பின்னர் மயக்கமடைந்தார். அக்கம்பக்கத்தில் இருப்பவர்கள், உடனடியாக ஆம்புலன்சுக்கு தகவல் தெரிவித்தனர். கோவை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் இறந்தார். பெரியநாயக்கன்பாளையம் போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X