பொது செய்தி

தமிழ்நாடு

காய்ச்சல் கண்டுபிடிக்கும் 'தெர்மல் ஸ்கேனர்' கருவி

Added : ஜூலை 25, 2020
Share
Advertisement
 காய்ச்சல் கண்டுபிடிக்கும் 'தெர்மல் ஸ்கேனர்' கருவி

வடவள்ளி:வடவள்ளி உழவர் சந்தைக்கு வருபவர்களின் உடல் வெப்பநிலையை, புகைப்படத்துடன் கண்காணிக்கும், புதிய 'தெர்மல் ஸ்கேனர்' சோதனை முயற்சியாக வைக்கப்பட்டுள்ளது.வடவள்ளி உழவர் சந்தைக்கு நாள்தோறும், 3,000க்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்கள் வந்து செல்கின்றனர். மாநகராட்சி சார்பில், புகைப்படத்துடன், உடல் வெப்பநிலையை கண்காணிக்கும் 'தெர்மல் ஸ்கேனர்' பொருத்தப்பட்டுள்ளது. இது, ஒரு மொபைல் போனுடன் இணைக்கப்பட்டுள்ளது.உடல் வெப்பநிலை அதிகமாக இருந்தால், அலாரம் அடிக்கிறது. இதன் மூலம், நாள்தோறும் உழவர் சந்தைக்கு வருபவர்களின் எண்ணிக்கை கணக்கிடப்படுவதோடு, அவர்களின் புகைப்படங்களும் சேகரிக்கப்படுகிறது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X