பொது செய்தி

தமிழ்நாடு

கொரோனா சிகிச்சைக்கு சுகாதார நிலைய டாக்டர் தமிழக அரசுக்கு பரிந்துரை

Added : ஜூலை 25, 2020
Share
Advertisement

திருப்பூர்:அரசு ஆரம்ப சுகாதார நிலைய டாக்டர்களை, கொரோனா சிகிச்சைப் பணியில் ஈடுபடுத்த மருத்துவ பணிகள் துறையினர் அரசுக்கு பரிந்துரை செய்துள்ளனர்.தமிழகத்தில், கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. இதனால், அந்தந்த மாவட்ட மருத்துவ கல்லுாரி மருத்துவமனை, தலைமை மற்றும் தாலுகா அரசு மருத்துவமனைகளில், கொரோனா தொற்றுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.இதற்கான பணியில், ஈடுபடும் டாக்டர்கள் மற்றும் செவிலியர்களுக்கு, 7 நாட்கள் பணி, 7 நாட்கள் தனிமை, 7 நாட்கள் ஓய்வு அளிக்கப்படுகிறது. அவ்வப்போது, டாக்டர்களும், செவிலியர்களும் கொரோனா தொற்றால் பாதிக்கப்படுகின்றனர்.அதிகரிக்கும் நோயாளிகளுக்கு ஏற்ப, டாக்டர்களை சுழற்சி முறையில் பணியமர்த்த முடியாத நிலையும் ஏற்படுகிறது.இதன் காரணமாக, அரசு ஆரம்ப சுகாதார நிலைய டாக்டர்களையும் கொரோனா தடுப்பு பணியில் ஈடுபடுத்துமாறு, அரசுக்கு, மருத்துவ பணிகள் துறையினர், பரிந்துரை செய்துள்ளனர்.மருத்துவ பணிகள் துறையினர் கூறுகையில், 'சிகிச்சை அளிக்க போதிய எண்ணிக்கையில் டாக்டர்கள் இல்லை. எனவே, ஆரம்ப சுகாதார நிலைய டாக்டர்களை, கொரோனா சிகிச்சையில் ஈடுபடுத்த அரசுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது,' என்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X