பொது செய்தி

தமிழ்நாடு

வனக்காவலர் கண்டெடுத்த பணம் உரியவரிடம் ஒப்படைப்பு

Added : ஜூலை 25, 2020
Share
Advertisement
 வனக்காவலர் கண்டெடுத்த  பணம் உரியவரிடம் ஒப்படைப்பு

தொண்டாமுத்தூர்:உலியம்பாளையத்தில், சாலையில் சிதறி கிடந்த ரொக்கப்பணம், உரிமையாளரான 'சிப்ஸ்' வியாபாரியிடம் ஒப்படைக்கப்பட்டது.உலியம்பாளையத்தில் சாலையில் சிதறிக்கிடந்த, 500 ரூபாய் நோட்டுகள் அடங்கிய, 17,500 ரூபாயை கண்டெடுத்த வனக்காவலர் செல்வராஜன், தொண்டாமுத்தூர் போலீஸ் ஸ்டேஷனில் ஒப்படைத்தார். வனக்காவலர் செல்வராஜனை போலீசார் பாராட்டினர். இதுகுறித்த செய்தி, படத்துடன் நேற்று நமது நாளிதழில் வெளியானது.இந்நிலையில், கஸ்தூரிநாயக்கன்பாளையத்தை சேர்ந்த, 'சிப்ஸ்' வியாபாரி பால்ராஜ், நமது நாளிதழில் வெளியான செய்தியை கண்டு, தொண்டாமுத்தூர் போலீஸ் ஸ்டேஷனுக்கு சென்றார். தொலைந்தது தனது பணம் என்பதை நிரூபித்து, பணத்தை பெற்றுக்கொண்டார்.பால்ராஜ் கூறுகையில், "தொண்டாமுத்தூருக்கு நண்பருடன் நேற்று வந்திருந்தேன். பைக்கில் வரும் பொழுது பணம் தவறி, கீழே விழுந்துள்ளது. இரவு, பகலாக உழைத்து, வியாபாரத்திற்காக வைத்திருந்த பணம் தொலைந்ததும், செய்வதறியாது பல இடங்களிலும் தேடினேன். பணம் கிடைக்காததால், மனவேதனையுடன் இருந்தேன்.தினமலரில் வெளியான செய்தியை கண்டு, நிம்மதி அடைந்தேன். நேர்மையாக பணத்தை போலீஸ் ஸ்டேஷனில், ஒப்படைத்த வனக்காவலர் செல்வராஜனுக்கும், உதவியாக இருந்த போலீசார் மற்றும் தினமலர் நாளிதழுக்கும் நன்றி," என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X