கூட்டுறவு சங்க பணியாளர் வேலை நிறுத்த போராட்டம்| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

கூட்டுறவு சங்க பணியாளர் வேலை நிறுத்த போராட்டம்

Added : ஜூலை 25, 2020
Share

பல்லடம்:பல்லடம், அவிநாசி வட்டாரத்தில், தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி பணியாளர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.சங்கங்களின் உறுப்பினர்களுக்கு நேரடியாக கடன் வழங்க அனுமதி, நகை ஏல குறைவு தொகையை நஷ்ட கணக்கு தாக்கல் செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட, 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி பணியாளர்கள், காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தை அறிவித்தனர்.அவ்வகையில், பல்லடத்தில் உள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி, வேலை நிறுத்த போராட்டம் காரணமாக தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. இதேபோல், பல்லடம் வட்டாரத்துக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளிலும் பணியாளர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டதை அடுத்து, கூட்டுறவு சங்கங்கள் மூடப்பட்டிருந்தன.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X