சம்பவம் செய்தி

தமிழ்நாடு

தடை செய்யப்பட்ட பகுதியில் மக்கள் ஆவேசம்: நிவாரணம் கேட்டு அதிகாரிகளை முற்றுகை

Added : ஜூலை 25, 2020
Share
Advertisement
 தடை செய்யப்பட்ட பகுதியில் மக்கள் ஆவேசம்: நிவாரணம் கேட்டு அதிகாரிகளை முற்றுகை

திருப்பூர்:திருப்பூரில், கொரோனா பரவல் காரணமாக கட்டுப்பாடு பகுதியாக அறிவிக்கப்பட்ட பகுதியினர், நிவாரணம் கேட்டு முற்றுகையில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.திருப்பூர் மாநகராட்சி, எஸ்.வி., காலனி பகுதியில், 22 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டு, மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதில், ஒருவர் உயிரிழந்தார்.தொற்று பரவலை தடுக்கும் வகையில் அங்குள்ள நான்கு வீதிகள் தடை செய்யப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது. நேற்று காலை அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். கட்டுப்பாட்டு பகுதி அறிவிப்பை திரும்ப பெற வேண்டும். வேலைக்கு போக வழியின்றி, வருமானமின்றி உள்ளதால், நிவாரணம் வழங்க வேண்டும்.ஒரு சிலர் அதிகாலை நேரத்தில் புறப்பட்டு வேலைக்கு சென்று விட்டு இரவு நேரம் திரும்புகின்றனர். அனைவரும் சென்று வரும் வகையில் தடைகள் அகற்றப்பட வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்தனர். இதனால், அங்கு பரபரப்பு நிலவியது.வடக்கு தாசில்தார் பாபு, போலீசார் மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் விரைந்தனர். நோய் தொற்று அதிகளவில் உள்ளது. கட்டுப்பாடு உத்தரவு சில நாட்கள் மட்டுமே உள்ளதால், நிர்வாகத்துக்கு ஒத்துழைக்க வேண்டும். உரிய மாற்று ஏற்பாடுகளும், தேவையான அடிப்படை வசதிகளும் முறையாக வழங்கப்படும் என அதிகாரிகள் தரப்பில் உறுதி அளிக்கப்பட்டது.அதன்பின், மக்கள் கலைந்து சென்றனர். நான்கு வீதிகளிலும் போலீஸ் பாதுகாப்பு அதிகப்படுத்தி, யாரும் வெளியேறாத வகையில் ஏற்பாடு செய்யப்பட்டது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X