சம்பவம் செய்தி

தமிழ்நாடு

போலீஸ் 'கஸ்டடி'யில் வாலிபரிடம் விசாரணை

Added : ஜூலை 25, 2020
Share
Advertisement

திருப்பூர்:திருப்பூரில், டிரைவர் கொலை தொடர்பாக, வாலிபரை ஒரு நாள் போலீஸ் 'கஸ்டடி'யில் எடுத்து விசாரணை நடந்தது.திருப்பூர், காங்கயம் ரோடு, நாச்சிபாளையத்தை சேர்ந்தவர் பேச்சிமுத்து, 32; டிரைவர். கடந்த, 11ம் தேதி இரவு திருப்பூர் மங்கலம் ரோடு லிட்டில் பிளவர் நகர், 2வது வீதியில் உள்ள கோவில் பின்புறம் பேச்சிமுத்து கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டு கிடந்தார். இதுதொடர்பாக சென்ட்ரல் போலீசார் விசாரித்தனர்.அதில், சின்னாண்டிபாளையத்தை சேர்ந்த வெள்ளைபாண்டி, 31, திருநெல்வேலியை சேர்ந்த சுடலைமணி, 29, லிட்டில் பிளவர் நகர், 3வது வீதியை சேர்ந்த கண்ணன், 32 ஆகியோரை கைது செய்தனர்.கொலை வழக்கு தொடர்பாக, சாத்தான்குளம் ஜே.எம்., கோர்ட்டில் சரணடைந்த வள்ளி நாயகத்தை, 30, ஒரு நாள் போலீஸ் 'கஸ்டடி'யில் சென்ட்ரல் போலீசார் எடுத்து அவரிடம் விசாரணை நடத்தினர். வாக்குமூலம் பெற்றனர். பின், நேற்று மாலை கோர்ட்டில் ஆஜர்படுத்தி மீண்டும் சிறையில் அடைத்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X