சம்பவம் செய்தி

தமிழ்நாடு

தீ வைத்ததாக கைதான நபருக்கு வயிற்று வலி 

Added : ஜூலை 25, 2020
Share
Advertisement

கோவை:கோவையில் கோவில்களில் தீ வைத்த சம்பவத்தில், கைது செய்யப்பட்ட கஜேந்திரன், உடல்நலக் குறைபாடு காரணமாக, கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.கடந்த 18ம் தேதி கோவை மாநகரில் உள்ள, இந்து கோவில்களின் முன் தீ வைப்பு சம்பவம் நடந்தது. இச்சம்பவத்தில் ஈடுபட்டதாக, சேலத்தை சேர்ந்த கஜேந்திரனை, தனிப்படை போலீசார் கைது செய்தனர்.பொள்ளாச்சி சப்-ஜெயிலில் அடைக்கப்பட்ட அவருக்கு, நேற்று கடுமையான வயிற்று வலி ஏற்பட்டது. சிறை பொறுப்பாளர் உத்தரவின் பேரில், பலத்த பாதுகாப்புடன் நேற்று கோவை அரசு மருத்துவமனைக்கு அழைத்து வரப்பட்டார். பரிசோதனைக்குப் பின், சிறை கைதிகளுக்கான தனிவார்டில் அனுமதிக்கப்பட்டார்.வயிற்றில் ஏற்கனவே உள்ள பாதிப்பினால், உடல்நலக்குறைவு ஏற்பட்டதாகவும், அதற்கான சிகிச்சை வழங்கப்பட்டு வருவதாகவும், மருத்துவமனை அதிகாரிகள் தெரிவித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X