சம்பவம் செய்தி

தமிழ்நாடு

தெருவில் சுற்றிய குழந்தைகள் மீட்பு: கொரோனா பரிசோதனைக்கு 'அட்மிட்'

Added : ஜூலை 25, 2020
Share
Advertisement

திருப்பூர்:அவிநாசி ரோட்டில் சுற்றித்திரிந்த குழந்தைகளை மீட்ட, 'சைல்டு லைன்' அமைப்பினர், கொரோனா பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.குழந்தைகள் பாதுகாப்பு பிரிவினர், நேற்று கள ஆய்வுக்கு சென்று கொண்டிருந்த போது, புஷ்பா தியேட்டர் பஸ் ஸ்டாப் அருகே, 10 வயதுள்ள சிறுவன், ஏழு மற்றும் ஐந்து வயதுள்ள சிறுமிகள் என, மூவரும் வருவோர், போவோரிடம் காசு கேட்டு கொண்டிருந்தனர்.அவர்களை மீட்ட, 'சைல்டு லைன்' அமைப்பினர், காப்பகம் அழைத்து சென்று, உணவு அளித்தனர். குடும்பம் குறித்து கேட்டதற்கு, அவர்களுடைய தந்தைக்கு காசநோய் பாதித்து, படுக்கையாக இருப்பது தெரிய வந்தது. அவர்களின் தாய், தந்தையை கவனித்து கொள்வதாகவும், அவர்கள் காசு கேட்பதாகவும் தெரிவித்துள்ளனர். குமரன் சிலை அருகே, ரோட்டோரமாக வசிப்பவர்கள் என்பதும் தெரியவந்தது.அதன்பின், மூவரும், மாவட்ட குழந்தைகள் நலக்குழுவில் ஒப்படைக்கப்பட்டனர். தந்தைக்கு காசநோய் இருப்பதாலும், கொரோனா தொற்று பரவி வருவதாலும், இவர்களுக்கு இரு பரிசோதனையும் செய்ய, அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு, மூன்று குழந்தைகளும் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X