அடுக்குமாடி கட்டுவதற்கு பொதுமக்கள் எதிர்ப்பு

Added : ஜூலை 25, 2020
Share
Advertisement
 அடுக்குமாடி கட்டுவதற்கு பொதுமக்கள் எதிர்ப்பு

பல்லடம்:பல்லடம் அருகே, அடுக்குமாடி குடியிருப்பு கட்ட, பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.மேற்கு பல்லடம், ராம்நகர் பகுதியில், வீட்டு வசதி வாரியத்தின் சார்பில், அடுக்குமாடி வீடு கட்டுவதற்கான பணிகள் நடந்து வருகின்றன. இதையறிந்த அப்பகுதி மக்கள், பணிகள் நடந்து வந்த இடத்தில் முற்றுகையிட்டனர்.அப்பகுதியினர் கூறுகையில், 'நீர்நிலையை ஒட்டி உள்ள புறம்போக்கு நிலத்தில், அடுக்குமாடி குடியிருப்பு கட்டுவதற்கான ஏற்பாடுகள் நடந்து வரு கிறது. களிமண் நிறைந்த இப்பகுதியில் அடுக்குமாடி குடியிருப்பு கட்டுவதால், கட்டடம் வலு விழந்து, ஆபத்து ஏற்படும். மக்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு, இப்பகுதியில் அடுக்குமாடி குடியிருப்பு கட்ட மாவட்ட நிர்வாகம் அனுமதிக்க கூடாது,' என்றனர்.வீட்டுவசதி வாரிய அதிகாரிகள் கூறுகையில், 'உரிய ஆய்வுக்கு பின்னரே, குடியிருப்பு கட்ட தீர்மானிக்கப்பட்டது. புறம்போக்கில் கட்டப்படவில்லை,' என்றனர்.பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்ததை தொடர்ந்து, கலெக்டரிடம் மனு அளிக்குமாறு, அதிகாரிகள் தெரிவித்தனர். இதனால், அனைவரும் கலைந்து சென்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X