கோவை:கோவை, 'கொடிசியா' மையத்தில், 300 படுக்கைகளுடன் கூடுதலாக ஒரு, 'கொரோனா' சிகிச்சை மையம், தயார் செய்யப்பட்டுள்ளது.'கொரோனா' தொற்று, 'ஏ' அறிகுறி உள்ளவர்கள், கோவை, 'கொடிசியா' மையத்தில் அனுமதிக்கப்படுகின்றனர். 'டி' அரங்கில், 350 படுக்கை வசதி செய்யப்பட்டுள்ளது. நாளுக்கு நாள், நோய் பரவல் அதிகரித்து வருகிறது. நேற்று, 180 நபர்களுக்கு தொற்று கண்டறியப்பட்டது. தினமும் நுாற்றுக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்படுகின்றனர்; அதே எண்ணிக்கையில், சிகிச்சையில் குணமாகி, 'டிஸ்சார்ஜ்' ஆகி செல்வதால், சிக்கல் இல்லாமல் இருக்கிறது.'டிஸ்சார்ஜ்' செய்யப்படுவோர் குறைவாகவும், அனுமதிக்கப்படுவோர் எண்ணிக்கை அதிகமாகும் சூழ்நிலையும் உருவானால், நெருக்கடி ஏற்படும்.ஆகவே, முன்னெச்சரிக்கையாக, 'கொடிசியா' - 'இ' அரங்கில், மேலும், 300 படுக்கை வசதி, மின் விசிறி, 'டிவி' வசதி செய்யப்பட்டுள்ளது. இந்த அரங்கில், கழிப்பறை எண்ணிக்கை குறைவாக இருக்கிறது.மாநகராட்சி சார்பில், 'மொபைல் டாய்லெட்' வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. காலை, 6:00 முதல் மதியம், 2:00 மணி வரை, மதியம், 2:00 முதல் இரவு, 8:00 மணி வரை, இரு 'ஷிப்ட்'டுகளாக, துாய்மை பணியாளர்கள், சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE