கோவை:வடவள்ளி - கவுண்டம்பாளையம் திட்டத்தில், பெறப்படும் குடிநீர் அளவை அதிகரிக்க, ரூ.38 கோடியில் மேற்கொள்ளும் பணி தொடர்பாக, மாநகராட்சி கமிஷனர் ஷ்ரவன்குமார் தலைமையிலான அதிகாரிகள் குழு, நேற்று கள ஆய்வு மேற்கொண்டது.கோவை மாநகராட்சி பகுதி மக்களுக்கு சிறுவாணி, பில்லுார் அணைகள், பவானி, ஆழியாறு ஆறுகளில் இருந்து குடிநீர் எடுத்து, சப்ளை செய்யப்படுகிறது. வடவள்ளி - கவுண்டம்பாளையம் திட்டத்தில், நாளொன்றுக்கு, 1.05 கோடி லிட்டர் குடிநீர் வர வேண்டும்.ஆனால், 90 லட்சம் லிட்டரே வருகிறது; 15 லட்சம் லிட்டர் சப்ளையில் குறைபாடு இருப்பதால், கள ஆய்வு செய்ய, மாநகராட்சி, குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் குழுவினர் நேற்று சென்றனர்.குடிநீர் 'பம்பிங்' ஸ்டேஷன் உள்ள, நெல்லித்துறையில் இருந்து கோவைக்கு பதிக்கப்பட்டுள்ள பிரதான குழாயில், 17 இடங்களில் உடைப்பு இருப்பது கண்டறியப்பட்டது.ரோடு விரிவாக்கம் செய்திருப்பதால், குழாய் மையப்பகுதியில் உள்ளது; வாகன போக்குவரத்தால் அழுத்தம் தாங்காமல், உடைப்பு ஏற்படுவது கண்டறியப்பட்டது.மக்கள் தொகை அதிகரிப்பை கணக்கில் கொண்டு, நாளொன்றுக்கு, 2.1 கோடி லிட்டர் குடிநீர் எடுக்கும் வகையில், ரூ.38 கோடியில் அபிவிருத்தி பணிகள் மேற்கொண்டு வருவதாக, குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் தெரிவித்தனர்.இப்பணிகளை, வரும் அக்., மாதத்துக்குள் முடிக்க, கமிஷனர் அறிவுறுத்தினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE