பொது செய்தி

தமிழ்நாடு

காண்டாமிருக வண்டுகளை அழிக்க பரிந்துரை

Added : ஜூலை 25, 2020
Share
Advertisement

ஆனைமலை:தென்னை மரங்களில், காண்டாமிருக வண்டுகளை அழிக்க, 'மெட்டாரைசியம் அனிசோபிலியே' பூஞ்சானம் பயன்படுத்த, வேளாண்துறையினர் அறிவுறுத்தினர்.ஆனைமலை ஒன்றியத்தில், தென்னை சாகுபடி அதிகமுள்ளது. மழைக்காலத்தில், காண்டாமிருக வண்டு தாக்குதலில், தென்னையில் கணிசமான அளவு மகசூல் பாதிப்பதுடன், மரங்களும் அழிந்து விடுகின்றன.இதை கட்டுப்படுத்த, ஆனைமலை வேளாண் அலுவலகத்தில் 'மெட்டாரைசியம் அனிசோபிலியே' பூஞ்சானம் விற்பனை செய்யப்படுகிறது.வேளாண்துறையினர் கூறியதாவது:காண்டாமிருக வண்டுகளின் வளர்ச்சி நிலை நான்கு பருவங்களாக உள்ளன. மழைக்காலங்களில் தோப்பில் மாட்டு சாண எருக்குழி, தோப்பில் போடப்பட்ட மக்கிய உரத்தின் அடிப்பகுதியில், ஐந்து முதல் 15 செ.மீ., ஆழம் வரையில் சென்று முட்டைகளிடும். முட்டை புழுவாகி, கூட்டுப்புழுவாக மாறும்.மழைக்காலத்தில் தான் காண்டாமிருக வண்டுகள், கூட்டுப்புழு பருவத்தில் இருந்து வண்டுகளாக வெளியேறும். மழைக்காலம் முடிவதற்குள் மீண்டும் முட்டைகளிடும். ஒரு பெண் காண்டாமிருக வண்டு, 150 முட்டைகள் வரையில் இடும்.இந்த வண்டுகள் தென்னை மரங்களின் இளம் குருத்துப்பகுதிகளை துளையிட்டு உள்ளே சென்று, மொட்டுப்பகுதியை சாப்பிடும். இதனால், 15 சதவீதம் வரையில் மகசூல் குறையும். தாக்கிய பகுதிகளில், பூஞ்சானம் பிடித்து, குருத்தழுகல் நோய் ஏற்படும், சிகப்பு கூன் வண்டு தாக்கும்; மகசூல் இழந்து மரம் மரணிக்கும்.காண்டாமிருக வண்டுகளை கட்டுப்படுத்த, 'மெட்டாரைசியம் அனிசோபிலியே' என்ற பூஞ்சானம் உதவுகிறது. தற்போது, 250 கிலோ ஆனைமலை வேளாண் அலுவலகத்தில் இருப்பு வைக்கப்பட்டு உள்ளது. ஒரு கிலோவின் விலை, 135 ரூபாயாகும். இந்த பூஞ்சானத்தை எருக்குழியில் கலந்தால், காண்டாமிருக வண்டுகளை அழிக்கும். இரவு நேரங்களில் ஏக்கருக்கு, ஒரு விளக்குப்பொறி வைக்க வேண்டும்.ஒரு கிலோ ஆமணக்கு புண்ணாக்கை, ஐந்து லிட்டர் நீரில் கரைத்து, ஏக்கருக்கு ஐந்து இடங்களில் பானையில் வைக்க வேண்டும். 15 நாட்களுக்கு ஒருமுறை பானையில் ஆமணக்கை மாற்ற வேண்டும்.இவ்வாறு, தெரிவித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X