பொது செய்தி

தமிழ்நாடு

அதிக மகசூலுக்கு நுண்ணுாட்டங்கள்: தேசிய உணவு பாதுகாப்பு திட்டத்தில் மானியம்

Added : ஜூலை 25, 2020
Share
Advertisement

உடுமலை:சாகுபடியில் அதிக மகசூல் பெற பயன்படும், நுண்ணுாட்டங்களுக்கு தேசிய உணவு பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் மானியம் வழங்கப்படுகிறது.திருப்பூர் மாவட்டத்தில், நெல், 8,062 ெஹக்டேர், தானிய பயிர் 56 ஆயிரத்து, 930 ெஹக்டேர், பயறு வகைகள், 19 ஆயிரத்து, 128 ெஹக்டேர், எண்ணை வித்துக்கள் 7 ஆயிரத்து, 960 ெஹக்டேர், பருத்தி, 1,430 ெஹக்டேர், கரும்பு, 3,360 ெஹக்டேர், என சராசரியாக, 96 ஆயிரத்து 632 ெஹக்டேர் சாகுபடி செய்யப்படுகிறது.பயிர்களில் அதிக மகசூல் பெற, நுண்ணுாட்டங்களுக்கு மத்திய அரசு மானியம் வழங்குகிறது.திருப்பூர் மாவட்ட தேசிய உணவு பாதுகாப்புத் திட்ட ஆலோசகர் அரசப்பன் கூறியதாவது:மாவட்டத்தில் பெரும்பாலான பகுதிகள் கரிசல் மண், ஓடைக்கல் பூமியாக இருப்பதால், சுண்ணாம்புச்சத்து அதிகம் உள்ளது. இதனால், பயிர்களுக்கு அளிக்கப்படும் உரங்கள் முழுமையாக கிடைக்காமல், மஞ்சள் கலந்த பழுப்பு நிறத்துடனும் ஊதா நிற இலைகளுடனும், வளர்ச்சி குறைந்து, நுண்ணுாட்டச்சத்து குறைபாட்டுடன் காணப்படுகிறது.நுண்ணுாட்டங்கள் பயிருக்கு சிறிதளவே தேவைப்பட்டாலும், பயிரின் வளர்ச்சியில் பெரும் பங்கு வகிக்கிறது. இந்த நுண்ணுாட்டக் கலவை கால்சியம், மெக்னீசியம், போரான், துத்தநாகம், இரும்பு, மாலிப்டீனியம் போன்றவற்றை உள்ளடக்கியதாகும்.பயிர்களின் வகைக்கு ஏற்ப, பயறு நுண்ணுாட்ட கலவை, சிறுதானிய நுண்ணுாட்ட கலவை மற்றும் நிலக்கடலை நுண்ணுாட்ட கலவை என வகைப்படுத்தப்படுகிறது.விதைப்பு செய்தவுடன், பயறுவகை பயிர்களுக்கு, ெஹக்டேருக்கு, 5 கிலோ வீதம், 20 கிலோ மணலுடனும், நிலக்கடலை மற்றும் தானியப் பயிர்களுக்கு, ெஹக்டேருக்கு, 12.5 கிலோ வீதம் 50 கிலோ மணலுடனும் மேலாக தூவ வேண்டும்.இந்த நுண்ணுாட்டங்கள் தேசிய உணவு பாதுகாப்பு திட்டம், பயறுவகை மற்றும் ஊட்டச்சத்து மிக்க தானியங்கள் திட்டத்தின் கீழ், 50 சதவீதம் அல்லது ெஹக்டேருக்கு, 500 ரூபாய் மானியத்தில் வழங்கப்படுகிறது. திட்டத்தில் பயன்பெற வட்டார வேளாண் உதவி இயக்குனர்கள், அலுவலர்களை தொடர்பு கொள்ளலாம்.இவ்வாறு, தேசிய உணவு பாதுகாப்பு திட்ட ஆலோசகர் தெரிவித்தார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X