பொது செய்தி

தமிழ்நாடு

தனியார் எஸ்டேட்டுக்கு பட்டா? வருவாய் துறை மேல்முறையீடு

Added : ஜூலை 25, 2020
Share
Advertisement
 தனியார் எஸ்டேட்டுக்கு பட்டா? வருவாய் துறை மேல்முறையீடு

கூடலுார்:கூடலுாரில், தனியார் எஸ்டேட் வசமுள்ள அரசு நிலத்துக்கு பட்டா வழங்க, கோர்ட் வழங்கிய உத்தரவை எதிர்த்து, மேல்முறையீடு செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.நீலகிரி மாவட்டம், கூடலுாரில், 80 ஆயிரத்து 88 ஏக்கர் நிலங்கள், 'ஜென்மம் ஒழிப்பு சட்டம் 1969ல்' கீழ், அரசின் கட்டுப்பாட்டுக்குள் வந்தன. அதில், எஸ்டேட் குத்தகை நிலங்கள், செக்சன்-17 நிலமாக அரசு வகைப்படுத்தியது.இந்நிலையில், கூடலுார் அருகே உள்ள, தனியார் எஸ்டேட் நிர்வாகம், இந்த நிலத்துக்கு பட்டா கேட்டு ஊட்டி கோர்ட்டில் வழக்கு தொடுத்தது. இந்த வழக்கில், அவர்கள் வசம் உள்ள, 1,705.9 ஏக்கருக்கு பட்டா வழங்க, கடந்த மாதம், 5ல் செசன்ஸ் கோர்ட் உத்தரவிட்டது. இந்த உத்தரவுக்கு மேல் முறையீடு செய்ய, அரசு தரப்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.கூடலுார், தாசில்தார் தினேஷ்குமார் கூறுகையில்,''குறிப்பிட்ட தனியார் எஸ்டேட்டுக்கு, 60 நாட்களில் பட்டா வழங்க செசன்ஸ் கோர்ட் உத்தரவிட்டுள்ளது. வருவாய் துறை, வனத்துறை இணைந்து மேல் முறையீடு செய்வதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது,''என்றார்.பழங்குடியினர் மனு...கூடலுார் அள்ளூர், கோடமூலா, காட்டுநாயக்கன்பட்டி உள்ளிட்ட கிராமங்களில் பழங்குடியினர் உட்பட, 500 குடும்பங்கள், 180 ஏக்கர் பரப்பில் வசித்து வருகின்றனர். அவர்கள் கூறுகையில், 'தனியார் எஸ்டேட்டுக்கு பட்டா கிடைத்துவிட்டால் நாங்கள் வெளியேற்றப்பட்டு, எங்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்படும்; எனவே, மாவட்ட நிர்வாகம், தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்து, எங்களுக்கு நியாயம் பெற்றுத் தர வேண்டும்,' என்றனர். இது தொடர்பாக, ஆர்.டி.ஓ., அலுவலகத்துக்கு வந்து மனு அளித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X