தேசிய நெடுஞ்சாலையில் விதிமீறும் வாகனங்களால் இம்சை

Added : ஜூலை 25, 2020
Share
Advertisement

மடத்துக்குளம்:மடத்துக்குளம் - உடுமலை இடையே அதிவேகமாக செல்லும் வாகனங்களை கட்டுப்படுத்த போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும்.தேசிய நெடுஞ்சாலையில் மடத்துக்குளம் அமைந்துள்ளது. இங்கு தொடங்கி ஒன்றிய அலுவலகம், கே.டி.எல்., கிருஷ்ணாபுரம், நரசிங்காபுரம், செட்டியார் மில் பகுதி வரை ரோட்டின் இருபுறமும் வீடுகள் கடைகள், பள்ளிகள், கோவில்கள் அமைந்துள்ளன. இங்கு பொதுமக்கள் அடிக்கடி ரோட்டை கடந்து திரும்புகின்றனர். தேசிய நெடுஞ்சாலையில் வாகனங்கள் மிக வேகமாக செல்கின்றன. பொதுமக்கள் கூறியதாவது:ஊரடங்கு நடைமுறையில் உள்ள நிலையில், பஸ்போக்குவரத்து இல்லாத ரோடுகளில் இரு சக்கர வாகனங்கள், சரக்கு வாகனங்கள், கார்கள் அதிவேகமாக இயக்கப்படுகின்றன. பல இடங்களில் வேகக்கட்டுப்பாடு அறிவிப்பு பலகைகள், அறிவுறுத்தல் விளக்குகள், டிவைடர்கள் அமைக்கப்பட்டுள்ளன. ஆனால் டிரைவர்கள் இதை அலட்சியப்படுத்தும் விதமாக, சாலை விதிகளுக்கு புறம்பாக வேகமாக வாகனங்களை இயக்குகின்றனர்.டிவைடர்களில் ஒன்றன்பின் ஒன்றாக வாகனங்கள் கடந்து செல்ல வேண்டும். ஆனால், வேகத்தை குறைக்காமல் வாகனங்கள் கடந்தும், முந்தியும், விலகியும் செல்கின்றன. சிறிது தடுமாறினாலும் பெரும் விபத்து நடக்கும் அபாயம் உள்ளது.இரவு நேரங்களில், அசுர வேகத்தில் செல்லும் வாகனங்களால், அப்பகுதி மக்கள் அச்சமடைந்துள்ளனர். எனவே மடத்துக்குளம் போலீசார், விதிமுறையை கடைபிடிக்காத வாகனங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். வாகனங்களின் டிரைவர்களுக்கு உரிய அறிவுரைகளை வழங்க வேண்டும். அப்போது தான் இப்பகுதிகளில் பெரும் விபத்துகளை தவிர்க்க முடியும்.இவ்வாறு, பொதுமக்கள் கூறினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X