பொது செய்தி

தமிழ்நாடு

உழவர் உற்பத்தியாளர் குழு அமைப்பு: உற்பத்தியை பெருக்க அதிகாரிகள் தீவிரம்

Added : ஜூலை 25, 2020
Share
Advertisement

பொள்ளாச்சி:நெகமம் சுற்றுப்பகுதி விவசாயிகளை ஒருங்கிணைத்து, உழவர் உற்பத்தியாளர் குழுக்கள் அமைக்கப்படுகிறது.பொள்ளாச்சி வடக்கு ஒன்றிய தோட்டக்கலைத்துறை சார்பில், காய்கறி உற்பத்தியை பெருக்கவும், விவசாயத்தில் நவீன கருவிகளின் பயன்பாட்டை புகுத்தவும் தீவிரம் காட்டப்படுகின்றன.சின்னநெகமத்தில் உழவர் உற்பத்தியாளர் குழுக்கள் தீவிர முயற்சியால், தற்போது உழவர் உற்பத்தி நிறுவனமாக தரம் உயர்ந்துள்ளது. தற்போது, நெகமத்தில், உழவர் உற்பத்தியாளர் குழு மற்றும் உழவர் ஆர்வலர் குழுக்கள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதற்காக, தலா, 20 உறுப்பினர்கள் கொண்ட, ஐந்து குழுக்கள் அமைக்கப்படுகிறது.வடக்கு ஒன்றிய தோட்டக்கலைத்துறை உதவி இயக்குனர் வசுமதி மற்றும் தோட்டக்கலை அலுவலர்கள் இப்பணியில் ஈடுபட்டுள்ளனர்.நெகமம் பேரூராட்சிக்கு உட்பட்ட சின்னேரிபாளையம், ரங்கம்புதுார், காளியப்பம்பாளையம் மற்றும் எம்.ஜி.ஆர்., நகரை ஒட்டிய சிறு, குறு, பெரிய விவசாயிகள் மற்றும் தன்னார்வலர்களை சந்தித்து, குழுக்களின் நோக்கம், நன்மைகள் குறித்து எடுத்துரைத்து, உறுப்பினர் சேர்ப்பு நடக்கிறது.ஐந்து குழுக்கள் அமைக்கப்பட்டதும்,உழவர் கூட்டமைப்பு ஏற்படுத்தப்படும்.கூட்டமைப்புக்கு, மானியத்தில் விதைகள், டிராக்டர் மற்றும் உழவு கருவிகள் வழங்கப்படும். வேளாண் உற்பத்தியை பெருக்கி, விவசாயிகளின் வாழ்வாதாரம் முன்னேற வழி கிடைக்கும் என, தோட்டக்கலைத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X